Stop 10
கோ பெங் குவான்: பதற்றமான நடுக்க நகர்
கோ பெங் குவான்
Artwork
3410.கோ பெங் குவான்: பதற்றமான நடுக்க நகர் (0:00)
0:00
0:00
“பதற்றமான நடுக்க நகர்” எனும் சொற்றொடரைக் கேட்கும்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? இயக்கம், பதற்றம்மன அழுத்தம், தவிப்பு, எதிர்பார்ப்பு?
சிங்கப்பூர் ஓவியர் கோ பெங் குவானுக்கு “நடுக்க பதற்றமான நகர்” என்றால், வெறித்தனமான வேகம், அதிகமான மன உளைச்சல், அடர்த்தியான வளர்ச்சி, தூய்மைக்கேடு ஆகியவையே நினைவுக்கு வரும்.
“பதற்றம்நடுக்கம்” என்பது நகரின் கட்டுமானங்கள், நம் உணர்வுகள், எண்ணங்கள், நரம்புகள் ஆகியவற்றில் பதிந்து கொள்வதைக் கோடி காட்டுவதாகவும் இருக்கக்கூடும். மிக வேகமான தொழில்மயம் மற்றும் நகர்மயத்திற்கிடையே 1966-இல் சிங்கப்பூருக்குத் திரும்பிய ஓவியரின் மன உணர்வுகளையும் இவை குறிக்கக்கூடும்.
இந்தக் கண்காட்சி, கோவின் ஓவிய வளர்ச்சியில் 1950-களிலிருந்து 1980-கள் வரையில், பல்வேறு இடங்களுக்கும் காலங்களுக்கும் இடையிலான முக்கியமான நேரங்களை தருணங்களை ஆராய்கிறது. நகர்ப்புறச் சூழல், விரிவான ஓவிய உலகம், இணைப்பு இணையொட்டுப்படக்கலை குறித்து ஓவியர் மேற்கொண்ட சோதனைகள் ஆகியவற்றுக்கு இடையிலான குறிப்பிட்ட தொடர்புகளை அது காண்கிறது.
என் பெயர் ஜோலீன். இந்தப் பகுதியின் காப்பாளரும் உங்கள் ஒலிவழி உலாவிற்கு வழிகாட்டியும் நான்தான்.
இந்தோனேசியாவில் 1937-இல் பிறந்த கோ பெங் குவான், 1945-இல் 8 வயதில் சிங்கப்பூரில் குடியேறினார். ஓர் இளைஞராக, நன்யாங் ஓவியர்களான சென் வென் ஹ்ஸி, சியோங் சூ பிங் ஆகியோரிடம் அவர் எண்ணெய் மற்றும் நீர்வண்ண ஓவியங்களைக் கற்றுக்கொண்டார்.
பின்னர் கோ மேற்படிப்புக்காக நியூயார்க் சென்றார். 1966-இல் சிங்கப்பூர் திரும்பிய அவர், தனக்கென ஒரு தனது சொந்த தனித்துவமான குறிப்பிட்ட குரலையும் பாணியையும் உருவாக்கினார். இன்றும்கூட அவை குறித்துத் தனது பணியில் அவர் தொடர்ந்து ஆராய்கிறார்.
கதவுகள் வழியாகச் சென்று, வலதுபுறமுள்ள சுவரைக் காணுங்கள். அங்கு உங்கள் ஒலிவழி உலாவின் அடுத்த நிறுத்தத்தைக் காண்பீர்கள்.