Stop 11
நியூயார்க் காலம்: கருத்தியலை ஏற்றுக்கொள்ளல்
Artwork
3411.நியூயார்க் காலம்: கருத்தியலை ஏற்றுக்கொள்ளல் (0:00)
0:00
0:00
கோ பெங் குவான் 1962-ல் நியூயார்க்கின் கலை மாணவர் லீக்கில் பயில்வதற்காகச் சிங்கப்பூரிலிருந்து புறப்பட்டார். அங்கு அவர், வகுப்புகள், கலைக்கூடங்கள், அரும்பொருளகங்கள், பகுதி நேர வேலைகள் என பரபரப்புடன் மாறி, மாறிச் சென்றுவந்தார்.
நியூயார்க்கில், கருத்தியல் வெளிப்பாடுகளுடன் தொடர்புடைய ஓவியர்களால் அவர் ஈர்க்கப்பட்டார்; அவர்களின் படைப்புகள், துடிப்புமிக்க தூரிகைவீச்சுகள், சக்திமிக்க வண்ணப் பகுதிகள் ஆகியவற்றால் தனித்தன்மை வாய்ந்தவையாகத் திகழ்ந்தன. இயற்கைத்தன்மையைக் கைவிட்ட கோ, கருத்தியலை ஏற்றுக்கொண்டார். அவர் இந்தப் பாணியையே தனது எஞ்சிய வாழ்நாள் முழுதும் பின்பற்றினார்.
கோவின் கருத்தியல் படைப்புகளில், சீனக் கலாசாரப் பாரம்பரியத்தின் செல்வாக்கை ஒருவர் காண முடியும். யு-வீச்சு, நடுவில் இல்லாத, ஒரு தனிப்பட்ட, தடிமனான, கறுப்புத் தூரிகைவீச்சு, பரபரப்பான பதற்றத்தை அறிமுகப்படுத்துகிறது. இந்த வீச்சு, சொந்த நாட்டில் கோ, சீன ஓவியம் மற்றும் எழுத்துக்கலை பயின்றபோது கற்றுக்கொள்ளப்பட்டது.
சில படைப்புகள் சமூக-அரசியல் நிகழ்வுகளால் உந்தப்பட்டு உருவாக்கப்பட்டவை. உங்கள் (இடது / வலது) புறமுள்ள கறுப்புப் பிற்பகல் 1963-ல் அதிபர் ஜான் எஃப் கென்னடி படுகொலை செய்யப்பட்ட பிறகு வரையப்பட்டது. உணர்ச்சிமிகு வண்ணங்கள் மற்றும் துடிப்புள்ள தூரிகைவீச்சுகள் மூலம், சோகம், அதிர்ச்சி ஆகிய உலகளாவிய தன்மைகளை வெளிப்படுத்த கருத்தியல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கோ முதலில் “பதற்றமான நகர்” எனும் பதத்தை நியூயார்க் நகருக்குப் பயன்படுத்தினார்; அங்கு, அமைக்கப்பட்ட சூழல், ஆரவாரம், சக்தி ஆகியவை உந்துசக்தியாக விளங்கின.1 அதன் வீதிகளில் நடந்து செல்லும்போது அவர் பார்வைக்கு அப்பாலிருந்து வருபவற்றைக் கேட்டு, முகர்ந்து, உணரத் தலைப்படுவார். பின்னர் அவர் இந்த எழுச்சிமிக்க, பல்லுணர்வு அனுபவத்தை வண்ணம் மற்றும் கட்டுப்பாடற்ற வடிவங்கள் மூலம் வெளிப்படுத்துவார்.
சான்றாக, அவரது விளம்பரங்கள் எனும் ஓவியத்தைப் பாருங்கள். குறுக்கு நெடுக்காகச் செல்லும் கிடைநிலை மற்றும் செங்குத்தான, உற்சாகமற்ற கறுப்பு மற்றும் பழுப்புக் கோடுகள், நியூயார்க் நகரத்தின் வலைச்சட்டம் போன்ற வடிவமைப்பையும், ஆதிக்கம் செலுத்தும் விளம்பரங்களையும் கோடிகாட்டுகின்றன. இந்தக் காட்சிகள், நகர்ப்புற வெளியின் வணிகமயமாதலையும் வெறித்தனமான வேகத்தையும் வெளிப்படுத்துகின்றன.
அமெரிக்காவில், இணையொட்டுப்படப் படைப்புப் பற்றி கோ ஆராயத் தொடங்கினார். அவரது முந்தைய அத்தகைய படைப்புகளைக் காண்பதற்கு உங்கள் (வலது / இடது) புறம் பாருங்கள். பின்னர் உலாவினைத் தொடர [கைகாட்டி / படைப்பு உள்ளிடவும்] பகுதிக்குச் செல்லவும்.