Stop 12
ங்கப்பூர் திரும்புதல்: நகரப் புதுப்பிப்புக்கு எதிர்வினைகள்
Artwork
3412.ங்கப்பூர் திரும்புதல்: நகரப் புதுப்பிப்புக்கு எதிர்வினைகள்(0:00)
0:00
0:00
கோ 1966-இல் சிங்கப்பூர் திரும்பினார். இங்கு அவர் வேறொரு “பதற்றமான நடுக்க நகரில்” இருப்பதை உணர்ந்தார்:. புதிதாகச் சுதந்திரம் பெற்று, ஒருபுறம் ஒரு வெற்றிகரமான பொருளியலை கட்டமைத்தல், மறுபுறம் ஒரு ஒன்றுபட்ட கலாசார அடையாளத்தை உருவாக்குதல் ஆகிய முரண்பட்ட நெருக்கடிகளுக்கு இடையே சிக்கித் தவித்த நாடு.
இந்தக் காலக்கட்டத்தில் கோ மீண்டும், மீண்டும் கையாண்ட கருப்பொருள் சிங்கப்பூரின் நகர மறுசீரமைப்பும், அதனால் சமுதாயத்தில் ஏற்பட்ட தாக்கங்களும்தான். கோல்லாஜையும் இணையொட்டுப்படத்தையும் அக்கிரிலிக் சாயத்தையும் பயன்படுத்தி, 1960-களின் பிற்பகுதிக்கும் 1980-களுக்கும் இடையில் தீவிரமான மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு, திணறிய நகரை அவர் தீட்டிக் காட்டினார். ஆகாயப் பார்வையில், அவர் நெருக்கமான நகர்ப்புற நிலைமைகளைக் காட்டினார்; “சிங்கப்பூரின் வண்ணங்கள்” என அவர் கருதிய வண்ணக் கலவைகளையே பயன்படுத்தினார்.
மறுசீரமைப்புப் பிரச்சினை பற்றி கோ இருமனம் கொண்டவராக விளங்கினார். அவர் வாழ்ந்ததும் வேலை செய்ததும் சைனாடவுனில்தான்; அந்த வட்டாரத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாகக் காரசாரமான விவாதம் நடைபெற்றது. முன்னேற்றத்தைப் பெறுவதற்காக,ப் பாதுகாக்கப்பட வேண்டிய வட்டாரத்தை இழக்க வேண்டி வருமோ என்று அவர் கலைப்பட்டார்.
இதனை நகரப் புதுப்பிப்பு எனும் கொல்லாஜ் இணையொட்டுப்படப் படைப்பில் காணலாம். அதில் பொங்கி வழிகிற வண்ணக் கலவைகளையும் மயக்கம் தருகிற வடிவங்களையும் காணலாம். வேண்டுமென்றே கிறுக்கல்களின் தரத்தை அதற்கு அளிப்பதன் மூலம், கோ அந்த நகர்ப்புற பல்வண்ணத் துண்டுகளுக்கு தாழ்ந்த தரத்தை வழங்குகிறார்; இது ஒருவேளை மரபுடைமை வட்டாரங்கள் அதிகமாக வணிகமயமாவதன் ஆபத்துக் குறித்து அவரது கருத்தைப் பதிவு செய்யும் ஒரு முயற்சியாக இருக்கலாம்.
இந்தக் காலக்கட்டத்தில், போருக்கு முந்திய கட்டடக் கலையின் பண்பையும் எழிலையும், குறிப்பாகத் தட்பவெட்ப நிலையால் பாதிக்கப்பட்ட சன்னல்களையும் கட்டடட மேற்பரப்புகளையும் பதிவு செய்வதில் தனது கவனத்தைச் செலுத்தினார். இதற்கு எடுத்துக்காட்டு 1987-இல் அவர் உருவாக்கிய சன்னல்கள் எனும் இணையொட்டுப்பட கொல்லாஜ் ஓவியம். கயிறு, ஆணிகள் போன்ற பொருள்களைக் கொண்டு, சொரசொரப்பான, முப்பரிமாணத் தரத்தில் உருவாக்கப்பட்டது அது. முன்புறத்தில் உருப்பெரிதாக்கு முறையில், மங்கிய வண்ணங்களும், தேய்ந்த இழையும் புலம்பலுக்குரிய, ஆவணத் தரத்தையும் நாள்பட்ட யதார்த்தத்தை மெய்நிகரையும் உருவாக்குகின்றன. ஒளிர்கின்ற கதம்பம் போன்ற நகரப் புதுப்பிப்புடன் பதற்றமாகத் தோற்றமளிக்கும் இந்தப் படைப்பு, உள்ளூர் பாரம்பரியக் கட்டடக் கலை மறைவதற்குமுன் அதன் உண்மை நிலையையும் அழகையும் படமாக்குவதற்கு ஆர்வத்துடன் முயல்கிறது.