Stop 13
ங்கப்பூர் திரும்புதல்: கலாசாரங்கள், சமூகங்கள் மற்றும் வரலாறுகள்
Artwork
3413.ங்கப்பூர் திரும்புதல்: கலாசாரங்கள், சமூகங்கள் மற்றும் வரலாறுகள் (0:00)
0:00
0:00
நாளடைவில், இணையொட்டுப்படத்தின் கோல்லாஜின் ஓவியத்தன்மையைப் பயன்படுத்திக் கொள்வதில் கோ அதிக நம்பிக்கை கொண்டவராக மாறினார். அன்றாடப் பொருள்களையும் பல அடுக்குச் சாயங்களையும் எழுத்துக்கலையையும் சேர்ப்பதன் மூலம், அவர் உள்நாட்டுக் கலாசாரங்கள், சமூகங்கள் மற்றும் வரலாறுகள் பற்றிய உணர்வுபூர்வமான படைப்புகளை உருவாக்கினார்.
ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட சீனப் பிரபஞ்ச பாரம்பரியங்களைப் பற்றிக் கூறும் ஜியோமன்சி எனும் குறிகூறலையோ அல்லது வாஸ்து எனும் ஃபெங்சுவைவேயையோ எடுத்துக்கொள்ளுங்கள். இங்கு, ஒரு வட்டம் நூல்களால் நான்கு கால் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது., ஃபெங்சுவயேயில் பயன்படுத்தப்படும் லுவோப்பான் திசைகாட்டி போல. சடங்குகள், சீனத் தேயிலை சுற்றப்படும் காகிதத்தாலும் எழுத்துக்கலையாலும் மனத்தில் பதியும்படியான சிவப்பு மற்றும் கறுப்பாலும் குறிப்பால் உணர்த்தப்படுகின்றன.
உங்கள் [வலது / இடது] புறமுள்ள தேயிலை வியாபாரி எனும் படைப்பு ஒரு வழக்கமான கலாசாரப் பழக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது: தேநீர் அருந்துதல். மென்மையான நீள்-சதுர வடிவிலான அரிரசிக் காகிதம், சீனத் தேயிலை சுற்றும் காகிதம் மற்றறும் தேயிலை ஒட்டுச்சீட்டுகள் ஆகியவற்றின் மீது சுற்றப்பட்டுள்ளது; இதன் வழி, படைப்பின் மேற்பரப்பு தொகுக்கப்பட்டு மேலும் வளமடைந்துள்ளது. மங்கலான மஞ்சள் வண்ணக் காகிதங்கள், சில பகுதிகளிலுள்ள சாயங்கள், மற்ற பகுதிகளில் காணப்படும் சுருக்கங்கள், கறைகள் ஓர் இதமான பின்புலத்தை உருவாக்குகின்றன; தேயிலை ஒட்டுச்சீட்டுகளின் ஒளிரும் வண்ணங்கள் அதனைச் சமநிலைப்படுத்துகின்றன.
உங்கள் [வலது / இடது] புறமுள்ள மரணப் புள்ளிகள் எனும் பெரிய படைப்பில் கோ மேலும் சென்று, குறியீடாகவும் மறைபொருளாகவும் கலாசாரங்களைக் கலக்கிறார். இங்கு அவர் பல்வேறு வகையான அறிவு முறைகளில் ஆர்வம் காட்டுகிறார். கோ, மாறுபட்ட துண்டுகளைச் சேகரிக்கிறார்: பாரம்பரியச் சீன மருத்துவ அட்டவணைகள், மனிதன் படைக்கப்பட்டது பற்றி விவிலியம் கூறுவது குறித்த குறிப்புகள், மேற்கத்திய ஓவியம், உடல் பாகங்களின் சின்னங்கள், மனித அடையாளம் ஆகியவை.
சீன மருத்துவ வரைபடங்களின் அடியில், நடுவில் உள்ள உருவத்திற்கும் வலதுபுறம் உள்ள உருவத்திற்கும் இடையில் பாருங்கள். ஒரு கைரேகை தெரிகிறதா? இப்போது பின்னால் நகருங்கள். ஒரு பெரிய முகம் உங்களைப் பார்த்து விழிப்பது தெரிகிறதா?
பல்வேறு தளங்களில் – கலாசார, குறியீடான, மூலப்பொருள் – நடைமுறைப்படுத்தப்பட்ட இந்தப் படைப்பு, பார்வையாளரின் சொந்தக் கற்பனை விளக்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது. அது உரையாடலில் அழகியல் குறித்த ஓவியரின் வளர்ச்சியை, உருவமற்ற கருத்தியல் ஓவியத்தில் விரிவான மேம்பாடுகளுடன் மக்களின் சமூக மற்றும் வாழ்ந்த உண்மைநிலைகளையும் விளக்குகிறது.
நாம் கோ பெங் குவான்: நடுக்க பதற்றமான நகர் எனும் ஒலிவழி உலாவின் இறுதிக் கட்டத்திற்கு வந்துவிட்டோம். என்னுடன் இணைந்ததற்கு நன்றி. இந்த ஓவியரின் மேலும் பல படைப்புகளைக் காண்பதற்கு, நகர மண்டபப் பகுதியின் இரண்டாவது மாடியிலுள்ள டிபிஎஸ் சிங்கப்பூர் கலைக்கூடத்திற்கு வருகை புரியுங்கள்.