Stop 8
3408

சுதந்திர உணர்வு

Artwork
Use headphones for a better listening experience and to be considerate to others.
3408.சுதந்திர உணர்வு (0:00)
0:00
0:00
இந்த சுதந்திர உணர்வு (2007) எனும் தலைப்பைக் கொண்ட மிகப்பெரிய படைப்பு, முகமது தின் காலமாவதற்குச் சிறிது காலத்திற்கு முன் உருவாக்கப்பட்டது. முகமது தின் நீண்டகாலமாகவே இஸ்லாமிய எழுத்தழகியல் முறையாலும் அதனை ஓவியத்தில் பயன்படுத்துவது குறித்தும் கவரப்பட்டிருந்தார். அதனால் 1992ல் அவர் இஸ்லாமியத் தற்கால கலைப் படைப்புகள் எனும் தலைப்பில் கண்காட்சி ஒன்றை ஏற்பாடு செய்ய உதவினார். இஸ்லாமிய எழுத்தழகியல் முறை பற்றியும் அது எவ்வாறு தென்கிழக்காசியாவின் நவீன ஓவியத்தில் இணைக்கப்படலாம் என்பது குறித்தும் கலந்துரையாடலைத் தூண்டிவிடுவதற்கு அக்கண்காட்சியை ஒரு வழியாக அவர் கண்டார். அரபு எழுத்துகள் பற்றிய அறிவியலில் அவர் ஆழமாக ஆழ்ந்தபோது, 1999ல் ஈரானிய எழுத்தழகியல் ஆசிரியர் ஹூசேன் ஷிராஸியிடம் அவர் இஸ்லாமிய எழுத்தழகியல் முறையைக் கற்றார். அவருடைய பிந்தைய படைப்பில் “எழுத்தழகியல் சக்தி” எனும் அணுகுமுறையின் மூலம் தமது வாழ்நாள் பயிற்சியான சிலாட்டை இணைத்துள்ளார். வண்ணத் தூரிகையைப் பயன்படுத்துவதற்குப் பதில் தனது கைகளால் சாயத்தை, நேரடியாக பெரிய, விரிவான வீச்சுகளால் சிலாட் அசைவுகளின் வழி பயன்படுத்தியுள்ளார். இந்த வகையில், அவர் தமது உள் சக்தியை தமது படைப்புகளிலும் அவற்றைக் காணும் அனைவரிடமும் மாற்றிவிட முடிந்தது.
Transcript
Share