Stop 7
பிரச்சினைகளும் உணர்ச்சிகளும்
Artwork
3407.பிரச்சினைகளும் உணர்ச்சிகளும்(0:00)
0:00
0:00
முகமது தின் ஒரு மெய்யுணர்வாளர் என்று அடிக்கடி வர்ணிக்கப்படுபவர்; அன்றாட நவீன வாழ்க்கையின் பதற்றங்களை வெளிச்சமிட்டுக் காட்டும் படைப்புகளை உருவாக்குவது அவரது ஓவியர் வாழ்க்கையின் முக்கிய நோக்கம். அவர் 1995ல் உருவாக்கிய பிரச்சினைகளும் உணர்ச்சிகளும் அந்த நோக்கத்திற்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது.
இதில் செய்தித்தாள் மற்றும் சஞ்சிகைத் துண்டுகள், கெபாயா ஆடையின் பின்னப்பட்ட கைப்பகுதிகள் மற்றும் வாயாங் கோலெக் தலைகள் ஆகியவற்றை ஓவியர் சேகரித்தார். அந்தக் கலைப்படைப்பு, பெருந்திரள் மக்கள் பயனீட்டால் ஏற்படுத்தப்படும் சுற்றுச்சூழல் அழிவிலிருந்து மனிதாபிமானச் சவால்கள் வரையிலான பிரச்சினைகளில் ஆழ்ந்த பார்வையைச் செலுத்த வைக்கிறது.
இந்தப் படைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள்குறித்து உங்கள் கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இந்தச் சுவர் சேகரிப்பில், ஓவியர் நீலம், ஆரஞ்சு, பழுப்பு வண்ணங்களைப் பயன்படுத்தி இருக்கிறார். சில வண்ணங்களுக்கு நோய் தீர்க்கும் குணம் இருக்கிறது என்பதைத் தமது படைப்புகளைக் காண்போர் உணர்வர் என்று முகமது தின் நம்பினார். எடுத்துக்காட்டாக நீலம் பார்வைக்குப் பயனளிக்கக்கூடும், ஆரஞ்சு செரிமானத்திற்கு உதவும், பழுப்பு ஒருமுகச் சிந்தனைக்கு உதவும்.
இந்த நம்பிக்கை அவர் பொருள்களைப் பயன்படுத்துவதிலும் நீண்டது. அதனால் குணமளிக்கும் தன்மை கொண்டவை என்று முகமது தின் நம்பும் பொருள்களை அவர் தமது படைப்புகளில் சேர்த்துக்கொண்டார். உங்கள் (வலது / இடது) பக்கம் நீங்கள் பார்க்கும் பூமி சக்தி, பூமி சக்தி II படைப்புகளில் இதனைக் காணலாம். இந்தப் படைப்புகளில் காணப்படும் மரத் துண்டுகள், விலங்குத் தோல், சிப்பிகள், விலையுயர்ந்த கற்கள் ஆகி ஒவ்வொன்றுக்கும் நோய் தீர்க்கும் சக்தி இருப்பதாக நம்பப்படுகிறது.
பாரம்பரிய வைத்தியத்தில் முகமது தின்ன் கொண்டிருந்த அக்கறைபற்றி நீங்கள் மேலும் தெரிந்துகொள்ள விரும்பினால், அருகிலுள்ள பொருள்கள், நிழற்படங்கள், பத்திரிகைச் செய்திகள் ஆகிவற்றைக் காணலாம். இந்தக் கண்காட்சியின் விவரத் தொகுப்பிலும் முகமது தின்னின் பாரம்பரிய சிகிச்சை முறை பற்றிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.