Stop 24
நேரமும் தொழில்நுட்பமும்
Artwork
3424.நேரமும் தொழில்நுட்பமும்(0:00)
0:00
0:00
லின் ஹ்சின் ஹ்சின்னின் படைப்புகளில் காலம் ஒரு மத்திய கருப்பொருளாக இருக்கும்; அதனால், அவர் தமது தனிக் கண்காட்சி ஒனறுக்கு காலத்திற்குக் காலம் எனத் தலைப்பிட்டார்; அதே தலைப்பில் ஒரு கவிதைத் தொகுப்பையும் அவர் வெளியிட்டார். ஒரு தொழில்நுட்பராக, ஓவியராக, இசைக் கலைஞராக அவர் காலத்தின் அறிவியல், அழகியல், தத்துவார்த்தப் பரிணாமங்களில் ஈடபட அவர் உந்தப்பட்டார்.
காலத்தின் அடுக்குகள், கிளர்ச்சியூட்டும் குமிழிகள் போன்ற ஓவியங்கள், காலம் கழிதலைச் சுட்டிக் காட்டுகின்றன; அதே வேளையில் காலத்தைப் பாராட்டுதல், காலத்திற்கு முன்னால் போன்றவை, பூமியில் குறைந்த காலமே வாழ்ந்தாலும் காலத்தின் கட்டுப்பாடுகளை மீறிச்செல்ல முயலும் மனித இனத்தின் தொடரும் வேட்கை பற்றிய சிந்தனைமிக்க வெளிப்பாடுகள் ஆகும். காலம் அவரது பேராவலின் அளவாகவும் இருக்கலாம். மற்றவர்களைவிட பல அடிகள் முன்னால் இருப்பதற்கே அவர் முயலுவார்; அதே வேளையில், சிக்கல் குறித்துச் சமரசம் செய்துகொள்ளாமல் தனது முடிவுகளை விரைவாக எட்ட பல வழிகளை அவர் ஆராய்வார்.
இந்த வகையான சிந்தனை, லின்னின் ஓவிய நடைமுறைகளில் அதிர்ச்சிதரக்கூடிய மாற்றத்தை ஏற்படுத்தியது; 1994-ல் அவர் தமது ஓவியத் தூரிகையை கைவிட்டுக் கணினிச் சுட்டியால் கலைப் படைப்புகளை உருவாக்க முடிவு செய்தார். 2012-ல் அவர் தமது விரலை மட்டும் பயன்படுத்தி, தொடுதிரையில் (எந்தவிதமான வரைகருவியும் இல்லாமல்) படைப்புகளை உருவாக்கினார்; அந்த முறை இன்றும்கூட குறிப்பிட்டுச் சொல்லும்படி வழக்கத்தில் இல்லை.
இறுதியாக, கோப்பு அளவின் கட்டுப்பாட்டால் இழுத்து நிறுத்தப்படாமல், தமது கலைப் படைப்புகளை விரிவுபடுத்த தொழில்நுட்பம் ஓவியருக்கு உதவியிருக்கிறது. நீங்கள் இங்கு பார்க்கும் மின்னிலக்க முறைப்படி வரையப்பட்ட மலைத் தோற்றம் எனும் ஓவியம், உண்மையில் முழுக் கலைப்படைப்பின் ஒரு சிறு பகுதிதான். அந்த முழுக் கலைப்படைப்பும் முழுமையாகக் காட்சிப்படுத்தப்பட்டால், ஓவியரின் கூற்றுப்படி, அது 1.8 கிலோமீட்டர் நீளமுடையது. மின்னியல் முறையில் வடிவமைக்கப்பட்ட டெண்ட்ரோகிராமைப் பயன்படுத்தி தனது ஓவிய நடைமுறையில் காட்டப்பட்ட அனைத்துக் காட்சிப் பொருள்களையும் காட்டுவதற்கு அவரால் முடிந்திருக்கிறது. டெண்ட்ரோகிராம் என்பது பொருள்களின் குவியலுக்கும் தரவுகளுக்கும் இடையிலுள்ள மரபுக்கூற்றைக் காட்டும் கணினி வரைபடத்திற்கான தொழில்நுட்பப் பெயராகும். அது இந்தக் கண்காட்சியில் ஒரு நீண்ட சுவரோவியமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.