Stop 25
இசை, இயற்கை, சுயம்
Artwork
3425.இசை, இயற்கை, சுயம்(0:00)
0:00
0:00
மின்னிலக்கம் உடன்பிறந்தது என வலியுறுத்தும் ஒருவரான, ஓவியத்திற்குத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் ஒருவரான, லின்னின் படைப்பில் எதிர்பாரா உயரிய தரமும் நெருக்கமான இசைச்கூறும் இருப்பதைக் காணலாம்.
அவர் தமது முந்தைய ஓடி டு ரியாலிட்டி எனும் ஓவியத்தில், தமது உள்ளார்ந்த விருப்பங்களைத் தெரிவிக்க, பெங்குயின்கள், நீர்நாய்கள் போன்ற விலங்குகளைக் குறியீடாகப் பயன்படுத்தி, தமது உள்உலகம் பற்றிய உள்ளுணர்வைப் புலப்படுத்தியிருக்கிறார். பறவைகள் மீதான கவர்ச்சி, அவருடைய மின்னிலக்கக் கலைப்படைப்புகளிலும் நீள்கிறது; அவற்றில், அவர் பறவைகள் ஒன்றுடன் ஒன்று உரையாடுவதுபோல் காட்டுகிறார்; டிவிட்டரின் வருகையைக் குறிக்கும் விசித்திரம் போல.
இயற்கைபற்றிய அவரின் பார்வையைப் படம் பிடிக்கும், ஒளிவீசக்கூடிய, பெரும்பாலும் சூட்சமமான உருவமற்ற எண்ணெய் ஓவியத்தில் சந்தத் தரத்தை நாம் காண முடியும். அக்குவா தொடரின் ஓர் ஓவியமான பெருங்கடல் எவ்வளவு ஆழம்? எனும் படைப்பில், தண்ணீர், இயற்கை ஆகியவற்றுடன் ஒருவர் தொடர்புபடுத்தும் உன்னதமான அழகை வெளிப்படுத்தும் அலையலையான கோடுகளும் தூரிகைவீச்சுகளும் கித்தானில் நடனமாடுவதைப்போல் தோன்றுகின்றன. அதே வேளையில், அதனை அடிமைப்படுத்தவும் மேலும் தெரிந்துகொள்ளவும் மனிதன் மேற்கொள்ளும் முயற்சிகளைக் குறியீடாகக் காட்டுகிறது.
ஆனால் அவரது இசைப் பயிற்சி, இசையில் உருவமற்ற கருத்தியல் தொடரில் தெளிவாகத் தெரிகிறது. அதில் தண்ணீர் இசை, வியாழக்கோள் பல்லிய இசைக்குழு போன்ற ஓவியங்களில் மேற்கத்தியப் பாரம்பரிய இசைக்குத் தனது பாராட்டை அவர் வெளிப்படுத்துகிறார்.
எப்போதும் அஞ்சாத ஆய்வாளரான லின், தனது பதின்ம வயதில், முன்முயற்சியின்றி இசைக்கூறுகளை இயற்றத் தொடங்கினார். 1980-கள் முதல், லின் கணினிச் செயல் திட்டங்களை எழுதத் தொடங்கினார். அவை அனலோக் அல்லது மின்னிலக்க ஒலி மாதிரிகள் இல்லாமலும் ஒலி அட்டைகள், வெளிப்புற இசைத் தொகுப்புகள், மிடி-கருவிகள் இல்லாமலும் பாரம்பரிய இசையை உருவாக்கின.
நீங்கள் செல்வதற்குமுன் இந்தக் கலைக்கூடத்தின் பக்க அறையில் சிறிது நேரம் செலவழியுங்கள். அங்கு மின்னிலக்க முறையில் அவர் இயற்றிய மூல இசையைச் செவிமடுக்கலாம்; அவரது கவிதைச் சிந்தனைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளையும் வாசிக்கலாம். இந்தக் கண்காட்சி லின் ஹ்சின் ஹ்சின்னின் தனித்தன்மைமிக்க பார்வைபற்றி உங்களுக்கு ஓர் அறிமுகத்தையும் அவரது ஓவிய நடைமுறை குறித்த பன்முகத்தன்மைபற்றி மேலும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தியிருக்கும் என்று நம்புகிறேன்.