Stop 20
அக்ரிலிக் மூலம் வேகப்படுத்தல்
Artwork
3420.அக்ரிலிக் மூலம் வேகப்படுத்தல்(0:00)
0:00
0:00
பாத்திக்கில் வேலை செய்யும்பொழுதே, அக்ரிலிக்கிலும் ஜாஃபர் அதிகமாக ஓவியங்களைத் தீட்டினார். சில வேளைகளில் அக்ரிலிக் மற்றும் பாத்திக் வண்ணப்பூச்சு நடைமுறைகளை அவர் ஒரே படைப்பில் பயன்படுத்தினார்.
ஜாஃபர் நாளடைவில் அக்ரிலிக் சார்பு நிலையை எடுத்தார். பாரம்பரிய பாத்திக் அதிக காலம் பிடிப்பதாகவும், பாத்திக் மற்றும் அக்ரிலிக் வண்ணத்திற்கிடையே உள்ள உறவை ஆய்வு செய்யவும் அவற்றைச் சமநிலைப்படுத்தவும் தான் ஆர்வம் கொண்டுள்ளதாகவும், அவர் ஒரு பத்திரிகை நேர்காணலில் தெரிவித்தார். ஒருவேளை அவர் பாத்திக் ஓவியங்களை வரைவதற்கு எடுத்துக்கொள்ளும் காலத்தைவிட பயன்படுத்தப்பட்ட சாயத்தின் அடிப்படையில், அவை வேகமாக மங்கி வருவதாலும் அவரது பல படைப்புகள் அவற்றின் மூல வண்ணங்களை இழந்து வருவதாலும் ஏற்பட்ட சலிப்பு இதற்குக் காரணமாக இருக்கலாம். அதிக வேகம், உடனடித்தன்மை, இயல்பு ஆகியவற்றுக்கு ஜாஃபருக்கு அக்ரிலிக் கைகொடுத்தது.
தமது ஓவியங்கள் தமது உள்ளுணர்வுகளையும் எண்ண ஓட்டங்களையும் பிரதிபலிப்பதாக ஜாஃபர் ஒருமுறை கூறினார். அவரது படைப்புத் தொடர்களின் தலைப்புகள் இதனைக் கோடி காட்டுகின்றன: அலைதல், தொலைநோக்கு, ஒடிஸி, ஓப்பரா, நாடகம், ஆழ்நிலை, உருமாற்றம்.
உங்கள் முன்னாலுள்ள இந்த இரண்டு ஓவியங்களும் 1980-களின் நடுப்பகுதியில் ஜாஃபர் வரைந்த தொலைநோக்கு தொடரின் ஒரு பகுதி.
கண்ணைக் கவரும் வேறுபட்ட வண்ணங்களும் துடிப்பான தூரிகைவீச்சுகளும் உயிருடன் நகர்வதைப் போன்ற தோற்றத்தை உருவாக்குவதைக் கவனியுங்கள். சிக்கலான, சாய்வான வளைகோடுகளைக் கொண்ட வடிவங்களும் துடிப்பான வண்ணங்களும், இங்கு 1980-களில் மிக வேகமாக. நவீனமயமான சிங்கப்பூரின் தீவிர சக்தியையும் ஒளிமயமான விளக்குகளையும் ஜாஃபரின் ஓவியங்கள் பிரதிபலிக்கின்றன. களைப்பற்ற நமது நகர-நாடு போல் ஜாஃபரின் ஓவியங்களும் ஓர் அவசரத்தன்மையை உணர்த்துகின்றன, எப்போதும் காலத்துடன் போட்டியிடுவதுபோல் அல்லது அவரது சொந்த வார்த்தைகளில் “காலம் காலத்துடன் சண்டையிடுகிறது.”