Stop 18
ஃபர் லத்தீஃப்: நெசவுத் துணிக் காலத்தில்
ஃபர் லத்தீஃப்
Artwork
3418.ஃபர் லத்தீஃப்: நெசவுத் துணிக் காலத்தில்(0:00)
0:00
0:00
ஜாஃபர் லத்தீஃப்: நெசவுத் துணிக் காலத்தில் எனும் கண்காட்சிக்கு வரவேற்கிறோம். என் பெயர் ஸ்ஸெ. இந்தப் பகுதிக்கு நான்தான் காப்பாளர், நான்தான் உங்களுக்கு வழிகாட்டியாக இருப்பேன்.
ஜாஃபர் லத்தீஃப், பாத்திக்கிலும் கருத்தியல் ஓவியத்திலும் புத்தாக்கப் படைப்புகளை உருவாக்கிய புகழ்பெற்ற உள்நாட்டு ஓவியர். 1960-களிலிருந்து 2007-ல் அவர் காலமாகும் வரை, 40 ஆண்டுகளுக்கு மேலாக படைப்பாக்கத்தில் அவர் ஈடுபட்டிருந்தார்.
1937-ஆம் ஆண்டு பிறந்த ஜாஃபர், வரைபட ஓவியரான தனது மாமாவிடமிருந்து நூல்களையும் சாதனங்களையும் இரவல் வாங்கி தன்னிச்சையாக ஓவியம் கற்றுக்கொண்டார். அவர் சிறுவயதாக இருக்கும்போதே தந்தை மறைந்ததால், ஜாஃபர் மூத்த பையன் என்ற வகையில் கலைப் பள்ளிக்குச் செல்வதற்குப் பதில் வேலை செய்ய முடிவு செய்தார். முதலில் அவர் தொடக்கப் பள்ளியில் மலாய் கற்றுக்கொடுத்தார்; பின்னர், ஓவியமும் கைவினையும் கற்றுக் கொடுத்தார். 1970-ல் சிங்கப்பூரின் முதல் வடிவமைப்புப் பள்ளியான பஹாருதீன் தொழிற்கல்வி நிலையத்தில் அவர் ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். அதன் மூலம் அவர் ஓர் ஓவியக் கல்வியாளராக வாழ்க்கையைத் தொடங்கினார். 20 ஆண்டுகளுக்கு மேலாக அவர் பஹாருதீன், தெமாசெக் பலதுறைத் தொழிற்கல்லூரி, நன்யாங் நுண்கலைக் கழகம், லாசால் கலைக் கல்லூரி உள்ளிட்ட பல கலைப் பள்ளிகளில் கற்பித்தார்.
ஜாஃபர் தனது ஓவியத்தை இல்லத்திலேயே படைத்தார். பெரும்பாலும் இது புக்கிட் மேராவில் தனது குடும்பத்தினருடனும் பல பூனைகளுடனும் அவர் பகிர்ந்துகொண்ட ஓர் எளிமையான வீ.வ.க. அடுக்குமாடி வீடாக இருந்தது. அதிகமான இடம் தேவைப்பட்டால், அவர் பொதுத் தாழ்வாரங்களில் அமைதியான இரவு நேரங்களிலோ வார இறுதியிலோ பணியாற்றுவார்.
நேரம் செலவழித்து இங்குள்ள நிழற்படங்கள், ஆவணப் பொருள்கள் ஆகியவற்றின் மூலம், காலக்கிரமத்தில் அவரது வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளுங்கள்.