Stop 17
எல்லையற்றது மற்றும் வரையறுக்கப்படாததுபற்றிய சிந்தனைகள்
Artwork
3417.எல்லையற்றது மற்றும் வரையறுக்கப்படாததுபற்றிய சிந்தனைகள்(0:00)
0:00
0:00
நாம் இப்போது, இதுவரை காணப்படாத, எளிதான விளக்கத்திற்கு எதிரானதை, எடுத்துக்காட்டும் இரண்டு முப்பரிமாணப் படைப்புகளிடம் நமது கவனத்தைத் திருப்புவோம்.
எல்லையற்றதன் விளிம்பு, வாழ்க்கை, காலம், அறியப்படாதவை ஆகியவை குறித்த எங்கின் உள்ளார்ந்த உணர்வுகளை வெளிப்படுத்திய படைப்பு. அது, ஒரு திரவமாக தனக்குள்ளேயே வளைந்து ஓடும் ஓர் ஒற்றைத் தளத்தைக் கொண்டுள்ளது.. விளிம்பு ஏறுகிறது, இறங்குகிறது, எனினும் தொடர்ந்து செல்கிறது, உடைபடாமலும் முடிவில்லாமலும். இந்தப் படைப்பு உருவாக்கும் நிழல்களையும் கவனித்துப் பார்க்க நேரம் செலவழியுங்கள்.
இப்போது மேலே பார்த்து, காற்றில் தொங்குவது போன்ற வடிவங்களைக் காணுங்கள். இது எண்ணத்தின் தானியங்கள் எனும் சிற்பத்தின் அளவு குறைந்த மாதிரிச் சிற்பம். முதலில் இது ஆசிய நாகரிக அரும்பொருளகத்திற்காக உருவாக்ககும்படி கேட்டுக்கொள்ளப்பட்டது. இப்போது அது சாங்கி விமான நிலைய ஜூவெலில் நிறுவப்பட்டுள்ளது. இந்தப் படைப்பு, கித்தான், காகிதம், துணி ஆகியவற்றுக்குப் பதிலாக முப்பரிமாண ஓவியமாக வரையப்பட்டுள்ளது.
எளிமையான அரிசித் தானியத்தைச் சுட்டுக்குறியீடாகப் பயன்படுத்தியிருப்பது, ஓவியரின் தனிப்பட்ட தன்மையாகும். தாவரவியல் தொடர்பான அனைத்தின்மீதான அவரது பற்றையும், ஆசியாவின் ஆன்மாவை உள்ளடக்கிய பொருள்மீதான அவரின் தேடலையும் அது எடுத்தியம்புகிறது. எளிமையான வடிவங்கள் தனிச் சிறப்பாக அமைவதோடு, ஆசிய மனங்களில் பெரிய அளவில் இடம்பெற்றிருக்கும் முக்கியமான உணவையும் அவை குறிப்பால் உணர்த்துகின்றன. அதன்மூலம், ஊட்டச்சத்து, வாழ்க்கை மற்றும் அனுபவத்தின் பொதுத்தன்மை ஆகிவற்றுடனும் தொடர்புபடுத்துகின்றன.
இறுதிப் படைப்பு இந்த மாதிரியைப்போல் ஐந்து மடங்கு பெரியது, அல்லது ஐந்து மீட்டர் நீளமுடையது. அதன் காணொளியை உங்கள் [வலது / இடது] புறத்தின் சுவரிலுள்ள கணினித் திரையில் காணலாம்.
இதனுடன் எங் டோ – ஆறாம் அறிவின் ஒலி உலா நிறைவு பெறுகிறது. இந்தப் பகுதியிலுள்ள ஓவியரின் மற்ற படைப்புகளைக் காண நேரம் செலவழியுங்கள். என்னுடன் இணைந்ததற்கு நன்றி. ஓவியரின் மேலும் பல படைப்புகளைக் காண்பதற்கு, தயவுசெய்து நகர மண்டபப் பகுதியின் இரண்டாம் தளத்திலுள்ள டிபிஎஸ் சிங்கப்பூர் கலைக்கூடத்திற்கு வருகை தாருங்கள்.