Stop 15
தண்ணீர், ஒளி, காற்று ஆகியவற்றின் சந்தம்
Artwork
3415.தண்ணீர், ஒளி, காற்று ஆகியவற்றின் சந்தம்(0:00)
0:00
0:00
தண்ணீர் தன்னைக் கவர்ந்தது பற்றிக் குறிப்பிட்ட ஓவியர், “நான் மாறுகின்ற ஒளியைப் பற்றி நினைக்கிறேன்: நாம் தண்ணீரைப் பார்க்கும்போது, அது ஒரே மாதிரி இருப்பதில்லை. எப்போதும் மாறிக்கொண்டே இருக்கிறது.”
மலாயில் இராமா லாகுன் அல்லது “கடற்கழியின் சந்தம்” இதைத்தான் கூறுகிறது. இங்கு தண்ணீரின் மேற்பரப்பில் விளையாடும் ஒளி, எங் டோவைக் கவர்ந்த தோற்றம், ஒரு புடைப்புகளுடன் கூடிய துணியில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. நீங்கள் இடதுபுறமாகவும் வலதுபுறமாகவும் நகர்ந்தால், கதகதப்பான வண்ணச்சாயல்கள், மேலும் இதமானவற்றுடன் ஒன்றிணைவதுபோல் தோன்றும்; அதனால், கண்ணோட்டத்திற்கு ஏற்ப பல்வேறு வகையான கருத்துகள் உருவாக வாய்ப்புண்டு. ஓர் அமைதியான கடற்கழியைக் காணும்போது ஒருவருக்கு ஏற்படும் நிலையில்லாத, மாற்றமடையும் என்னத்தை இது தூண்டுகிறது.
இந்தப் பாடலுக்குரிய படைப்பு, தனித்தன்மைமிக்க “புடைப்புகளுடன் கூடிய துணிகளுக்கு” ஓர் எடுத்துக்காட்டு. எங் டோவின் வாழ்க்கைத் தொழில் காலத்தின், முதல் 15 ஆண்டுகளில் இவற்றுக்காகவே குறிப்பாக அவர் அறியப்பட்டார். இந்தப் படைப்புகளை உருவாக்க, அவர் தட்டையான துணியை மடக்கியும் மடித்தும் தைப்பார்; இதன்மூலமாக, பார்ப்பவரை ஈர்க்கும்படி மேற்புறத்தைத் துடிப்புடன் விளங்கச் செய்வார்.
1982-ல் அவர் உருவாக்கிய மேலும் இரண்டு படைப்புகள், பாலியில் காலை மழை, பாலியின் படங்கள் ஆகியவற்றில், ஓவியர் வரைதலையும் வண்ணத்தையும் மடிக்கப்பட்ட துணியின் மேற்புறத்தில் விரிவாகப் பயன்படுத்தியிருப்பதைக் காணலாம். பாலியில் காலை மழையில், ஒரே அளவு இடைவெளியில் உள்ள மடிப்புகளின்மீது பல வண்ணங்களின் விரைவான வீச்சுகள் குறுக்காகப் பூசப்பட்டிருப்பதைக் காணலாம்; இது மிகக் கனமான மழையின் ஆற்றலையும் சக்தியையும் வெளிப்படுத்துகிறது. எங் முதன் முதலில் பாலிக்கு மேற்கொண்ட வருகையின்போது, வளமான வெப்பமண்டல மழைக்காடுகளும் செழிப்பான நெல் வயல்களும் அடங்கிய அழகிய நிலத்தோற்றக் காட்சிகள் அவர் மனத்தில் ஏற்படுத்திய ஆழமான உந்துதலால் இந்தப் படைப்புகள் உருவாக்கப்பட்டன.
எங்கின் துணியிலான புடைப்பு வடிவமைப்புகள் மேலும் பலவற்றை அறையின் இந்தப் பக்கம் நெடுகிலும் காணலாம். நீங்கள் இங்கு பார்த்து முடித்தபிறகு, கோயில் குளத்திற்குள் உற்றுநோக்குதல் எனும் கலைப்படைப்பைக் கண்டுபிடித்துச் செல்லுங்கள். அங்கிருந்து உங்கள் உலா தொடரும்.