Stop 10
சிங்கப்பூர் தலைமை நீதிபதி
நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு, தலைமை நீதிபதியின் அறை
Venue
110.சிங்கப்பூர் தலைமை நீதிபதி(0:00)
0:00
0:00
காலனித்துவ காலத்தில் 1867ஆம் ஆண்டிலிருந்து பிரிட்டிஷ் தலைமை நீதிபதிகளை நியமித்தது ஆங்கிலேய அரசு. சுதத்திரத்திற்குப் பிறகு, சிங்கப்பூர் உச்ச நீதிமன்றம் நான்கு ஆசிய தலைமை நீதிபதிகளைப் பெற்றிருந்தது. சிங்கப்பூர் மலாயாவுடன் இணைந்து மலேசியா உருவான பிறகு, 1963ல் வீ சொங் ஜின் தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பினாங்கு ஜார்ஜ்டவுனில் 1917ஆம் ஆண்டு பிறந்த இவர், சிங்கப்பூர் சட்டத்துறையில் முதல் உள்ளூர் உறுப்பினராகச் சேர்த்துக்கொள்ளப்பட்டார். பிறகு தனது 41வது வயதில் கீழ்நிலை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தலைமை நீதிபதி பதவியில் அவர் 1990 வரை பணியாற்றினார். 1990-லிருந்து 2006 வரை யோங் பங் ஹாவ் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார். இவரைத் தொடர்ந்து 2006ஆம் ஆண்டிலிருந்து 2012ஆம் ஆண்டு வரை சான் செக் கியோங் தலைமை நீதிபதியாக இருந்தார். இதைப் பதிவு செய்யும் காலக்கட்டத்தில், தலைமை நீதிபதி பதவியை சுந்தரேஷ் மேனன் வகிக்கிறார்.
நீதிமன்றச் சங்கங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள, ஆரம்ப நிறுத்தப் பட்டியலில் 'நிறுத்தம் 5A – த இன்ஸ் ஆஃப் கோர்ட்’ பொத்தானைத் தட்டுங்கள்.