Stop 8
சான்சரி சேம்பர்
நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு
Venue
108.சான்சரி சேம்பர்(0:00)
0:00
0:00
தலைமை நீதிபதியின் அறை அவர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. அறையின் நடுவில், நீண்ட மர மேசையை நீங்கள் பார்க்க முடியும். நீதிமன்ற அவை அமைப்புடன் ஒத்திருக்கும் வகையிலேயே அறையின் உட்புற அமைப்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. நீதிமன்றத் தோற்றத்துடன் ஒத்திசைவாக இருக்கும்வகையில் மரச்சட்டம் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. அறைக்கும் நீதிமன்றத்திற்கும் இடையே உள்ள இணக்கத்தை இது பிரதிபலிக்கிறது.
இப்பொழுது கலைக்கூடம் 1ஆக இருக்கும் முன்னாள் நீதிமன்ற அவை 1-இல் இருக்கும் தலைமை நீதிபதி இருக்கையை நீங்கள் இங்கிருந்தே பார்க்க முடியும்.