Stop 7
சான்சரி அறை மற்றும் மாநாட்டு மண்டபம்
நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு
Venue
107.சான்சரி அறை மற்றும் மாநாட்டு மண்டபம்(0:00)
0:00
0:00
நாம் இப்பொழுது தலைமை நீதிபதி அறையில் நின்று கொண்டிருக்கிறோம். மிக மிக அசாதாரணமான வடிவமைப்புள்ள ஒரு பெரிய மர இருக்கையை நீங்கள் பார்க்க முடியும். ஒரு மேசையாகவும் அதிலிருந்து இன்னொரு மேசை முளைத்திருப்பது போலவும், கிட்டத்தட்ட தலைமை நீதிபதியின் இருக்கையைச் சுற்றியிருப்பது போலவும் இது காணப்படுகிறது. இந்த மேசையை வடிவமைத்த வில்லியம் ஸ்வாஃபீல்ட்தான் நாம் பிறகு பார்க்கப்போகும் வட்ட மண்டபத்தையும் வடிவமைத்திருக்கிறார். இங்கிருக்கும் அறைகலன்கள் அனைத்தும் மிகக் கவனமாக மறுநிர்மாணம் செய்யப்பட்டிருப்பதால், தலைமை நீதிபதி அந்நாளில் அறையை எப்படிப் பயன்படுத்தியிருப்பார் என்பதை யூகிக்க முடியும். ஸ்வாஃபீல்ட் வடிவமைத்த புகைப்படச் சட்டங்களும் அந்த அறையில் புத்தக அலமாரிகளுக்கு மேல் இருந்தன. புத்தக அலமாரிகளை நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால் அதன் கண்ணாடிச் சட்டங்களில் பல சின்னங்களைப் பார்க்கலாம். இவை நீதிமன்ற சங்கங்களின் சின்னங்கள்.
முன்பு, தலைமை நீதிபதி தன் அலுவலகத்திற்கு வந்து சேர அறைகளுக்கு முன்னாலிருக்கும் நடைவழி அல்லது வாகன நிறுத்துமிடத்திலிருந்து அவருக்கு என்று ஒதுக்கப்பட்ட தனி மின்தூக்கியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். கீழ் இணைப்புச் சரிவின் அடியில் உங்கள் இடப்புறத்திலுள்ள ஒரு சிறிய கதவு வழியாக அந்த மின்தூக்கி இடத்திற்குச் செல்லாம்.
முன்பெல்லாம் இக்கட்டடத்தில் 7 பயணிகள் மின்தூக்கிகளும் ஒரு புத்தக மின்தூக்கியும் செயல்பட்டன. ஐந்து மின்தூக்கிகளில் இரட்டைக் கட்டுப்பாட்டு வசதி இருந்தது. மின்தூக்கி உதவியாளர் செயல்படுத்த ஒன்று, தரை தளத்தில் தானியங்கி முறையில் மற்றொன்று. 2002 வாக்கில் தலைமை நீதிபதி பயன்படுத்திய மின்தூக்கி மட்டுமே இயங்கிக் கொண்டிருந்தது.