Stop 5
சிங்கப்பூர் அரச தலைவர் யூசோப் இஷாக் பதவியேற்பு விழா
நிலை 3, சிட்டி ஹால் விங்
Archive
105.சிங்கப்பூர் அரச தலைவர் யூசோப் இஷாக் பதவியேற்பு விழா(0:00)
0:00
0:00
மண்டபத்தின் சிவப்பு வண்ணம் பூசப்பட்ட மேற்கூரையையும், வெள்ளைச் சுவர்களையும் பாருங்கள். இது சிங்கப்பூர் தேசியக் கொடியின் சிவப்பு, வெள்ளை நிறங்களைப் பிரதிபலிக்கிறது. 1959ஆம் ஆண்டு சிங்கப்பூரின் யாங் டி-பெர்துவான் நெகாரா, அதாவது மலாய் மொழியில் அதிபர் என்ற பதவியை யூசோஃப் இஷாக் ஏற்ற சடங்கின்போது மண்டபத்திற்கு இந்த வண்ணம் பூசப்பட்டது. உங்கள் திரையில் இக்காட்சி இப்பொழுது தெரிகிறது. ஆவணப் புகைப்படத்தில் அவர் முகம் தெளிவாகத் தெரியாவிட்டாலும், நீங்கள் அவரை அடையாளம் கண்டுகொள்ளலாம். இன்று புழக்கத்திலிருக்கும் சிங்கப்பூர் வெள்ளி நோட்டுகளின் முதல் பக்கத்தில் அவர் உருவம் பதிக்கப்பட்டிருக்கிறது.