Stop 4
104

அரசு கட்டிட மாநாட்டு கூடம்

நிலை 3, சிட்டி ஹால் விங்
Venue
நேஷனல் கேலரி சிங்கப்பூர், கான்கோர்ஸ், நிலை 1 இல் தொடங்கவும்
Use headphones for a better listening experience and to be considerate to others.
104.அரசு கட்டிட மாநாட்டு கூடம்(0:00)
0:00
0:00
நீங்கள் நின்று கொண்டிருக்கும் இடம்தான் நகர மண்டப அறை. இக்கட்டடத்தில் இதுதான் மிகவும் பிரம்மாண்டமான அறை. காலனித்துவ காலத்தில் சிங்கப்பூரின் வளர்ச்சித் திட்டங்கள் அனைத்தையும் நகர மன்ற ஆணையர்கள் கூடி இங்குதான் விவாதித்தனர். தொடர்ந்து உருண்டோடிய ஆண்டுகளில், சிங்கப்பூரின் வளர்ச்சியை வரலாற்றில் பதிக்க உதவிய பல முக்கிய நிகழ்வுகளுக்கு இந்த மண்டபம் சாட்சியாக நின்றிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போது, இந்த அறையில்தான் நட்புப் படைகளிடம் ஐப்பானியர்கள் அதிகாரபூர்வமாக சரணடைந்தனர். உங்கள் திரையில் ‘3.1 – சரண்’ பொத்தானைத் தட்டுங்கள். செப்டம்பர் 12, 1945 அன்று அந்த நிகழ்ச்சியில் எடுத்த புகைப்படத்தை நீங்கள் பார்க்கலாம். அன்று காலை 10 மணி அளவில் நகர மண்டபத்தைச் சுற்றியிருக்கும் வசதியான இடங்களில் எல்லாம் ஆயிரக்கணக்கானப் பார்வையாளர்கள் கூடியிருந்தனர். கட்டடத்தின் உள்ளே லார்ட் மவுண்ட்பேட்டன் பார்த்துக் கொண்டிருக்க சரணாகதி ஒப்பந்தத்தின் பதினோரு பக்கங்களில் ஜெனரல் இடகாகி கையொப்பமிட்டார். தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானியர்களின் ஆதிக்கம் முடிவடைந்த நாள் அது. அடுத்த வரலாற்று நிகழ்வு பதினான்கு ஆண்டுகள் கழித்து 1959ல் அரங்கேறியது. அன்றிலிருந்துதான் சிங்கப்பூர் மாறத் தொடங்கியது. சிங்கப்பூரின் முதல் அமைச்சரவையும் பிரதமர் லீ குவான் இயூவும் அன்றுதான் பதவி ஏற்றனர். அந்தச் சடங்கு மிக எளிமையாக நடந்தேறியது. பத்திரிகையாளர்கள் எவரும் அழைக்கப்படவில்லை. உள்ளூர் ஓவியர் லாய் குய் ஃபாங் வரைந்த ஓர் ஓவியம் மட்டுமே இன்றளவும் அதற்கு சாட்சியாக உள்ளது. வாய்வழியாகச் சொல்லப்பட்ட செய்திகளையும், ஆராய்ச்சியில் கிடைத்த தகவல்களையும் சேகரித்து ஓவியர் லாய் அந்தக் காட்சியை மீண்டும் உருவாக்கியிருக்கிறார்.
Transcript
Share