Stop 20
புதைக்கப்பட்ட வரலாறு
நிலை 1, உச்ச நீதிமன்றப் பிரிவு, உச்ச நீதிமன்ற ஃபோயர்
120.புதைக்கப்பட்ட வரலாறு(0:00)
0:00
0:00
ஆறு ஸ்ட்ரெய்ட்ஸ் குடியேற்றச் செய்தித்தாள்களும் கைநிறைய ஸ்ட்ரெய்ட்ஸ் குடியேற்ற நாணயங்களும் காலப் பெட்டகத்தில் வைக்கப்பட்டதாக செய்திகள் கூறின. 1937 மார்ச் 31ஆம் தேதி வெளியான ஆறு செய்தித்தாள்கள் இவை: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், ஃப்ரீ பிரஸ், மலாயா ட்ரிபியூன், வார்ட்டா மலாயா, சின் சியூ ஜிட் போ. ஒரு சில தலைப்புச் செய்திகளை இப்பொழுது உங்கள் திரையில் நீங்கள் பார்க்கலாம்.
அந்தக் காலத்தின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதை அவை சுட்டிக் காட்டுகின்றன. ஜெர்மனி மறுபடியும் போர்த்தளவாடங்களைச் சேகரிக்கும் திட்டத்திற்கு எதிர்நடவடிக்கையாக பிரிட்டன் மறுபடியும் படைகளைச் சேகரிக்கிறது, முய் ட்சாய் எனப்படும் பெண் கொத்தடிமை ஒழிப்பு போன்ற தலைப்புகளில் செய்திகள் வெளியாகியுள்ளன.