Stop 19
அடித்தள கல் மற்றும் நேர காப்ஸ்யூல்
நிலை 1, உச்ச நீதிமன்றப் பிரிவு, உச்ச நீதிமன்ற ஃபோயர்
Venue
119.அடித்தள கல் மற்றும் நேர காப்ஸ்யூல்(0:00)
0:00
0:00
உச்ச நீதிமன்ற முகப்பில் நுழைந்தவுடன், நடுத் தரையில், மாடிப்படிகளுக்கும் கதவுக்கும் இடையில் எட்டு முக அடிக்கல் வைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். அதன் படம் ஒன்று உங்கள் திரையில் இப்பொழுது தெரிகிறது. சுற்றிப் பாருங்கள், மறுபுறத்திலிருந்து அதில் செதுக்கப்பட்டிருக்கும் எழுத்துக்களைப் படியுங்கள்.
அடிக்கல் என்பது மிகவும் முக்கியம் வாய்ந்த ஒன்று. ஒரு கட்டுமானத்தை ஆரம்பிக்கும் முன்னர் முழு கட்டடம் எவ்வாறு எழும்பி நிற்கும் என்பதை அடிக்கல் நிர்ணயிக்கிறது. 1937 ஏப்ரல் 1ஆம் தேதி ஆளுநர் சர் ஷெண்டன் தாமஸ் இந்த அடிக்கல்லை நாட்டினார். ஒரு தனிப்பட்ட காலனியாக ஸ்ட்ரெய்ட்ஸ் குடியேற்றத்தின் 70வது ஆண்டு நிறைவையும் இந்த அடிக்கல் குறிக்கிறது. அதிகக் கவனத்துடன் அடிக்கல் நாட்டப்பட்ட பிறகு அடிக்கல்லின் நான்கு ஓரங்களை ஒரு மரச் சுத்தியால் தட்டி, “அடிக்கல் நாட்டப்பட்டுவிட்டது” என்று அறிவித்தார் சர் தாமஸ். இந்தச் சடங்கை உங்கள் திரையில் படத்தின் மீது தட்டிப் பார்க்கலாம்.
குறுக்காக 7 அடி நீளமும் கிட்டத்தட்ட இரண்டு டன் எடையும் கொண்ட இந்த அடிக்கல், அன்றைய காலக் கட்டத்தில் மலாயாவிலேயே மிகப் பெரிய அடிக்கல்லாக இருந்தது. 1930ஆம் ஆண்டில் செதுக்கப்பட்ட எழுத்துருக்களைப் பாருங்கள். இரண்டாம் உலகப்போர் சமயத்தில் சிங்கப்பூரை ஆக்கிரமித்த ஜப்பானியர், காலனித்துவ அரசாட்சியைக் குறிக்கும் மேற்குறிப்புகளை அழிக்கும் நோக்கத்துடன் அடிக்கல் மீதிருந்த பித்தளை எழுத்துக்களை அகற்றி விட்டனர். அதிர்ஷ்டவசமாக, உச்ச நீதிமன்றப் பாதுகாவலர் திரு ஜி. சி. டி சில்வா இவற்றைக் கவனமாகப் பாதுகாத்து வைத்திருந்தார். போர் முடிந்ததும் அந்த எழுத்துக்கள் மீண்டும் பொருத்தப்பட்டன.
அடிக்கல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திலிருந்து நீங்கள் அன்னாந்து மேலே பார்த்தால், பிரதான குவிமாடத்தின் கீழ் நீன்று கொண்டிருப்பதை உணர்வீர்கள். கட்டுமானப் பணிகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்போது அடிக்கல் பாதிப்படையாமல் இருக்க அது குவிமாடத்தின் அடியில் வைக்கப்பட்டிருந்தது.
இந்த வரவேற்பறையில் இன்று நீங்கள் நடக்கும் போது ஒரு ரகசியத்தின்மீது நடக்கிறீர்கள். அடிக்கல்லின் கீழ் ஒரு காலப்பெட்டகம் புதைக்கப்பட்டுள்ளது. 3000வது ஆண்டில் இந்தப் பெட்டகம் திறக்கப்படும்போது அதனுள் வைக்கப்பட்டிருந்த பொருள்கள் எவை என்று தெரியவரும். அவை என்னவாக இருக்கும்?