Stop 18
ரோட்டுண்டா மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆய்வகம் எங்கள்
நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு, ரோட்டுண்டா நூலகம் & காப்பகம்
Venue
118.ரோட்டுண்டா மற்றும் புலம்பெயர்ந்தோர் ஆய்வகம் எங்கள்(0:00)
0:00
0:00
முன்னாள் உச்ச நீதிமன்றக் கட்டுமானத்தில் சீன, இந்தியத் தொழிலாளிகளும் கைவினைஞர்களும் ஈடுபட்டிருந்தனர். இந்தக் கட்டுமானத்தின் போது சுமார் 200 சீன, இந்திய ஊழியர்கள் உச்ச நீதிமன்றக் கட்டடத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர் என்று பதிவு செய்யப்பட்டிருகிறது. ஆண் தொழிலாளர்களைத் தவிர, சாம்சுய் பெண்களும் ரோட்டுண்டா கட்டடத் தரை வேலையில் ஈடுபட்டிருந்ததைக் காட்டும் புகைப்படங்கள் உள்ளூர் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தன. சீனாவிலிருந்து குடிபெயர்ந்து வந்து கட்டுமானத் தொழிலில் தங்களை ஈடுபடுத்திக் கொண்ட இவர்கள் தங்கள் அடையாளமாக தலையில் சிவப்புத் துணி அணிந்திருந்தனர். பொருளாதார நிர்பந்தத்தாலும் திருமண வாய்ப்புகள் தேடியும் தங்கள் சொந்த நாட்டை விட்டு இந்தப் பெண்கள் சிங்கப்பூரில் குடியேறியிருந்தனர்.