Stop 15
நோரியின் மற்ற படைப்புகள்
நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு, உச்ச நீதிமன்ற ஃபோயர்
115.நோரியின் மற்ற படைப்புகள்(0:00)
0:00
0:00
சிற்பிகளும் கலைஞர்களும் அடங்கிய குடும்பத்தில் பிறந்த ருடோல்ஃபோ நோலி, 19வது வயதில் மாமனைப் பின் தொடர்ந்து கிழக்குத் திசையில் பயணித்து மிகச் சிறப்பான வாழ்க்கைத் தொழிலில் ஈடுபட்டார். 1921ஆம் ஆண்டு சிங்கப்பூருக்குக் குடிபெயர்வதற்கு முன்னர் 8 ஆண்டுகள் தாய்லாந்து அரசவைக்காக சில திட்டங்களைச் செய்து முடித்தார். சிங்கப்பூரின் நகர மண்டபம், முன்னாள் உச்ச நீதிமன்றக் கட்டடங்கள் ஆகியவற்றை வடிவமைத்துக் கட்டியதோடு 1920களிலும் 30களிலும் சிங்கப்பூரில் இன்னும் பல கட்டடங்களை இவர் வடிவமைத்தார். சுற்றுலா ஆரம்பப் பட்டியல் முதல் நிறுத்தப் பக்கத்தின் கீழே ‘மேலும் தெரிந்து கொள்ளுங்கள்’ பகுதியில் நோலி படைத்திருக்கும் இன்னும் பல கட்டடங்களை நீங்கள் உங்கள் திரையில் காண முடியும். இவர் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவையாக இருப்பவை: ஃபுல்லர்டன் கட்டட முகப்புத் தோற்றம், வார்ப்பு இரும்பு விளக்குகள், எல்ஜின் பாலத்திலிருக்கும் சிங்க உருவ புடைப்புச் சித்திரங்கள், இப்பொழுது தகர்க்கப்பட்டிருக்கும் ஓஷன் கட்டட முகப்பு ஆகியவையும் அதில் அடங்கும். இவை அனைத்தும் இந்தக் கலைக்கூடத்திற்கு அருகிலேயே உள்ளன. சுற்றுலாவை முடித்துக் கொண்டு நீங்கள் இவற்றைப் பார்க்கலாம். நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இக்கட்டடத்தின் பல தூண்கள் நோலியின் கைவண்ணத்தில் உருவானவையே. கட்டடத்தில் நடந்து கொண்டிருக்கும் போது, அவர் முத்திரையுள்ள படைப்புகளை உங்களால் அடையாளம் காண முடிகிறதா என்று பாருங்கள்.