Stop 12
வரலாற்று நடைபாதை
நிலை 3, உச்ச நீதிமன்றப் பிரிவு
Venue
112.வரலாற்று நடைபாதை(0:00)
0:00
0:00
வளாகத்தில் நடந்து செல்லும்போது, தரையிலிருக்கும் கருப்பு வெள்ளை தரைக்கற்களைப் பாருங்கள். முக்கிய வளாகத்தின் தரை, முன்பு கிரசோனைட் ரப்பரால் செய்யப்பட்டிருந்தது. போர் நடந்து கொண்டிருந்த காலத்தில் ஒரு புதுமையான ஆனால், சிக்கனமான முறையில் தேர்ந்தெடுத்து பயன்படுத்தப்பட்ட பொருள் இது. மேலும் ஒலி அளவைக் குறைப்பதிலும் அது சிறந்தது.
பழைய உச்ச நீதிமன்றத்தைப் புதுப்பித்து தேசியக் கலைக்கூடமாக உருமாற்றம் செய்யும் போது, இந்த ரப்பர் தளங்கள் அகற்றப்பட்டு பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டன. ஆனால், இதன் அசல் வடிவம் அப்படியே பாதுகாக்கப்பட்டது. கட்டங்கள், முன்னிருந்த அதே சதுரங்கப்பலகை வடிவத்தில் அமைக்கப்பட்டன. தூரத்திலிருந்து பார்க்கும் போது கருப்பு வெள்ளைப் பட்டைகளாக ஒளியியல் மாயத்தோற்றத்தை அளிக்கும். கொஞ்சம் பின்னால் திரும்பி தாழ்வாரத்தின் கோடியைப் பார்த்தால் இந்த மாயத்தோற்றம் உங்களுக்குப் புலப்படும்.
இப்பொழுது, ஒரு நல்ல இடத்தைத் தேர்ந்தெடுத்து மரச்சட்டங்களால் செய்யப்பட்ட மேற்கூரையைப் பாருங்கள்.
நீதிமன்ற அவைகளும் வரலாற்றுப் புகழ்மிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற முகப்பு அறைக் கூரைகளும் மரச்சட்டங்களால் அழகுற வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கூரைகளில் இடையிடையே உள்ள இடைவெளிகளைப் பாருங்கள். இதற்கு பேழைக் கூரை என்று பெயர். ஒரு பேழையை உருவாக்கும் போது பற்பல ஆழங்கள் கொடுத்து பல வடிவங்களில் கூரை, வளைவுக்கூரை அல்லது குவிமாடம் செய்யப்படுகிறது. அலங்காரத்துக்காக செய்யப்பட்டாலும் இது ஒட்டுமொத்தக் கூரையின் எடையைக் குறைக்கிறது.