Stop 4
விட்டு விடுதலையாகி
3404.விட்டு விடுதலையாகி(0:00)
0:00
0:00
அவர் தனது பெரும்பகுதியான பார்வையை இழந்துவிட்டது அவரது கலைப் படைப்பாக்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவர் பல்வேறுவிதமான பொருட்களைப் பயன்படுத்தத் தொடங்கியது மட்டுமின்றி, அவர் தன உள்மன மற்றும் தத்துவார்த்த நோக்கத்தில் செயல்படத் தொடங்கினார். அத்தோடு, உடற்குறையுடன் ஓவியராகப் பணியாற்றுவதை ஒப்புக்கொண்டு, அதனை ஏற்றுக்கொண்டார்.
இந்தக் கலைக்கூடத்தில், சங்கின் சில சிற்பங்களையும் நிறுவல்களையும் நீங்கள் காணலாம். அவை ஒவ்வொன்றும் கருப்பொருளிலும் ஊடகத்திலும் வெவ்வேறானவை; ஆனால், அனைத்தும் படைப்பாளர் என்ற வகையில் சங்கின் விளையாட்டுத்தனத்தையும், எல்லைகளை உடைத்துச் சோதனை செய்யும் அவரது விருப்பத்தையும் சுட்டுவதாக இருக்கும்.
தரையில் வைக்கப்பட்டுள்ள அவரது விருப்புடன் சிந்தித்துத் தொடருங்கள் (I) எனும் படைப்பு, காகிதமும் பசையும் கொண்டு செய்யப்பட்ட காலியான வடிவங்கள், மணிகளால் நிரப்பப்பட்டு இருப்பதைக் காணலாம். மேலும், பாரம்பரிய மற்றும் தற்காலச் சீன இலக்கியத்திலிருந்து எடுக்கப்பட்ட பகுதிகளும் மரபுத் தொடர்களும் தீட்டப்பட்டிருப்பதையும் காணலாம்.
சதுரங்க விளையாட்டு, உருளும் சிவப்புத் தூசு ஆகியவற்றையும் அணுக்கமாகப் பார்க்கும்படி உங்களை அழைக்கிறேன். அவை இரண்டும் அவருடைய வாழ்க்கைத் தொழிலின் பிற்பகுதியில் உருவாக்கப்பட்ட பெரிய அளவிலான படைப்புகள்; எனினும், ஐரோப்பாவில் அவர் ஓவிய மாணவியாக இருந்தபோது நிறுவல் படைப்புக் குறித்து அவர் சோதனை முயற்சிகளை மேற்கொண்ட காலத்திற்குப் பின்னோக்கிச் செல்கின்றன. முறையே 1999-லும் 2006-லும் உருவாக்கப்பட்ட இந்தப் படைப்புகளை, பார்வையாளர் பங்குகொள்ளும் நோக்கத்தில் ஓவியர் படைத்துள்ளார். நீங்கள் இந்த நிறுவல்களில் எவ்வாறு நகர்ந்துசென்று இருவழித் தொடர்பை ஏற்படுத்த முடியும் என்பதைக் கற்பனை செய்து பார்க்கமுடியுமா?
நீங்கள் இங்கு பார்த்தபிறகு, சதுரங்க விளையாட்டின் பின்புறமுள்ள சுவர்ப் பக்கம் சென்றால் உங்கள் உலா தொடரும்.