Stop 1
ண்டும்: ஆறு சிங்கப்பூர் ஓவியர்கள் 1965-க்குப் பிறகு
3401.ண்டும்: ஆறு சிங்கப்பூர் ஓவியர்கள் 1965-க்குப் பிறகு(0:00)
0:00
0:00
வெளிப்பட வேண்டும்: ஆறு சிங்கப்பூர் ஓவியர்கள் 1965-க்குப் பிறகு எனும் கண்காட்சிக்கு உங்களை வரவேற்கிறோம். எனது பெயர் செங் யு ஜின். நான் சிங்கப்பூர் தேசியக் கலைக்கூடத்தின் மூத்த காப்பாளர்.
இந்தக் கண்காட்சி, சுதந்திரத்திற்குப் பிறகு புகழ்பெற்ற சிங்கப்பூர் ஓவியர்களான சிங் சியோக் டின், கோ பெங் குவான், ஜாஃபர் லத்தீஃப், லின் ஹ்சின் ஹ்சின், முகம்மது டின் முகம்மது, எங் தவ் ஆகியோரின் ஓவிய நடைமுறைகளைக் காட்சிப்படுத்தி ஆராயும் ஆறு பகுதிகளைக் கொண்டது.
அப்போது, சிங்கப்பூருக்குக் கிடைத்திருந்த நாடு எனும் புதிய தகுதியுடன் ஒரு புதிய தேசிய அடையாளமும் கிடைத்ததைக் காட்டுவதற்குச் சிங்கப்பூரிலிருந்த ஓவியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் செயல்பட்டனர். அவர்கள் ஓவியத்தைப் புதிய மற்றும் வெவ்வேறான வகைகளில் உருவாக்க, சோதனை முயற்சிகளில் ஈடுபட்டனர். அதன் மூலம், ஒரு வகையை மற்றோரு வகையுடன் இணைத்து அவர்கள் ஏற்படுத்திய படைப்புகள், உள்நாட்டு நவீனபாணியில் ஒரு துடிப்பான காலக்கட்டத்தை உருவாக்கின.
இது, சிங்கப்பூரில் இருந்த முந்தைய தலைமுறை ஓவியர்களிடமிருந்து – “நன்யாங் ஓவியர்கள்” என அறியப்பட்டவர்கள் – குறிப்பிடத்தக்க அளவில் விலகிச் செல்வதாக இருந்தது. அந்த நன்யாங் ஓவியர்கள் பெரும்பாலும் வெளிநாடுகளில் பிறந்து, சீன மை ஓவிய நுட்பங்களை மேற்கத்தியச் சட்ட ஓவிய பாணியுடன் கலந்து, உள்நாட்டு மற்றும் வட்டாரக் கருப்பொருள்களைக் கொண்டு உருவாக்கியவர்கள்.
இந்த ஆறு ஓவியர்களும், சிங்கப்பூர்ச் சமுதாயத்தின் பல கலாசாரத் தன்மையைப் பிரதிபலிக்கும் அவர்களின் மாறுபட்ட பின்புலம் மற்றும் நடைமுறைகளுக்காகத் தேர்வு செய்யப்பட்டனர். கூடுதலாக, அவர்களில் மூவர் பெண்கள்; அவர்கள் ஆணாதிக்க ஓவிய உலகத்தில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டவர்கள்; ஆனால், அவர்களின் படைப்புகள் பெருமளவு கவனிக்கப்படாதவை.
இந்தச் சுற்றுலாவில், ஒவ்வொரு பகுதியின் காப்பாளரும் கண்காட்சியில் உங்களை வழிநடத்திச் செல்வர்; அவ்வேளையில் ஒவ்வோர் ஓவியரின் நடைமுறைகளையும் அவர்கள் வெளிச்சமிட்டுக் காட்டுவர். நீங்கள் பின்தொடர்ந்து செல்லும்போது, ஓவியப் படைப்புகளை அணுக்கமாகக் கவனிக்க நேரமெடுத்துக்கொள்ளுங்கள். அதே வேளையில், ஆழமான காட்சி ஆய்வுக்காக அடியிலுள்ள குறிப்புகளையும் வாசியுங்கள்.
இந்த ஓவியர்களின் ஓவிய நடைமுறைகளை நீங்கள் பார்த்து ஒப்பீடு செய்யும் அதே நேரத்தில், அவர்களின் கலைப்படைப்புகளுக்கு இடையிலான உங்களின் சொந்தத் தொடர்புகளையும் சிந்தித்துப் பார்க்கும்படி ஊக்கமளிக்கிறோம். ஒருவேளை, நீங்களும், இந்த ஓவியர்களைப் புதிய முறையில் காண்பதற்கு வழி ஏற்படலாம்.