Stop 1
கட்டிடக்கலை வரலாறு மல்டிமீடியா சுற்றுப்பயணத்தின் அறிமுகம்
நிலை 1, கான்கோர்ஸ்
101.கட்டிடக்கலை வரலாறு மல்டிமீடியா சுற்றுப்பயணத்தின் அறிமுகம்(0:00)
0:00
0:00
வணக்கம். சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தின் கட்டட வரலாறு பல்லூடகச் சுற்றுலாவுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
இந்தச் சுற்றுலாவில் இரண்டு கட்டடங்களுக்கு நீங்கள் செல்வீர்கள். முதலாவதாக நகர மண்டபம், இரண்டாவதாக முன்னாள் உச்ச நீதிமன்றம். இவை இரண்டும் சிங்கப்பூர் தேசிய கலைக்கூடத்தின் நகர மண்டபப் பிரிவாகவும், முன்னாள் உச்ச நீதிமன்றப் பிரிவாகவும் இருந்தன. இந்தச் சுற்றுலாவின்போது, இக்கட்டடத்துடன் தொடர்புடைய வரலாற்றையும் மக்களின் கதைகளையும் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.
நீங்கள் எங்கிருந்து வந்திருந்தாலும் நகர மண்டபக் கட்டடத்தின் இரண்டாவது தளத்திற்கு வாருங்கள். இங்கே வந்து சேர்ந்ததும், கட்டடத்தின் முகப்பில், பரந்து விரிந்திருக்கும் புல்வெளியைப் பார்த்தவாறு பெரிய பெரிய ஜன்னல்கள் ஒருபுறமும், உங்கள் பின்புறத்தில் பிரம்மாண்டமான பளிங்கு மாடிப்படிகளையும் காண்பீர்கள். கட்டட வரலாறு எழுதப்பட்டிருக்கும் செய்திப் பலகை ஒன்று அங்கே இருப்பதையும் நீங்கள் பார்க்க முடியும். கையிலிருக்கும் வரைபடம் நீங்கள் அங்கே செல்ல உதவியாக இருக்கும்.