Stop 5
3405

மாறுதல் பற்றி

Online audio tour
Use headphones for a better listening experience and to be considerate to others.
3405.மாறுதல் பற்றி(0:00)
0:00
0:00
சங், பேரார்வத்துடன் எழுதக்கூடியவர். மேலும், சீன இலக்கியத்தைப் பெரும் வேட்கையுடன் வாசிப்பவர். அவற்றின் தாக்கமும், பாரம்பரிய சீனக் கலாசாரத்தின் தாக்கமும் அவரது படைப்பில் தெளிவாகத் தெரியும். சொல்லப்போனால், இந்தப் பகுதிகளின் தலைப்புகள் வெளியிடப்பட்ட அவருடைய எழுத்துகளில் இருந்து எடுக்கப்பட்டவைதான். இந்தப் பகுதியில், கலைக்கூடத்தின் அந்தப் பக்கத்திலுள்ள படைப்புகள் அனைத்தும் 1970-களிலும் 1980-களிலும் உருவாக்கப்பட்டவை. அப்போது சங், சீன இலக்கியம் மற்றும் கலாசாரம் ஆகியவைபற்றிய தன்னுடைய அறிவையும், வெளிநாட்டில் பயிலும்போது கற்ற செதுக்குதல் மற்றும் ஒட்டுப்படங்கள் குறித்த திறன்களையும் இணைப்பதற்கு ஆர்வமாக இருந்தார். சீனத் தத்துவத்திலும், குறிப்பாக ஐ-சிங் அல்லது மாற்றங்களின் நூல் எனும் சீன ஜோசிய நூலில் கூறப்பட்டுள்ள யோசனைகள் குறித்து அவர் ஆர்வம் கொண்டிருந்தார். முடிவு செய்வதற்கு ஒரு வழிகாட்டியாக எழுதப்பட்ட, சீன இலக்கியத்தில் ஒரு சிறந்த படைப்பான ஐ-சிங், மாற்றவியலா எண்ணம் I & II, ஐ-சிங்கில் வேறுபாடுகள் ஆகிய அச்சுப் படைப்புகளுக்கு உந்துசக்தியாக விளங்கியது. அவற்றை நீங்கள் அந்தச் சுவருக்கு அப்பால் காணலாம். ஐ-சிங்கில் வேறுபாடுகள் எனும் படைப்பிலுள்ள ஒவ்வொரு சதுரமும் நேரடியாக 64 ஹெக்ஸாகிராம் எனும் அறுமுனை நட்சத்திரங்களுடன் தொடர்புடையவை. அவை, சம்பந்தப்பட்ட இந்த வகை ஜோசியத்திற்கு உள்ள உத்தேச விடைகளின் இணைப்புகளாகும். உங்கள் கேள்விக்கு எந்த அறுமுக நட்சத்திரத்தில் விடையிருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள காசைச் சுண்டிப் போடுவதைப் போல, சங்கும் ஐ-சிங்கில் ஒரு காசைச் சுண்டிப்போட்டு அது தனக்கு அளித்த விடையின் அடிப்படையில் ஊடகங்களைக் கலந்து ஒரு படைப்பை உருவாக்கினார். ஐ-சிங்கில் வேறுபாடுகள் எனும் படைப்பு இருக்கும் அதே இடத்தில், இரண்டு படைப்புகள் இருப்பதை நீங்கள் காணலாம். அவை இரண்டுமே பல்வேறு ஊடகங்களைச் சேர்த்து உருவாக்கப்பட்டவை. சீனத் தத்துவத்திலிருந்து நாம் இப்போது இஸ்லாமிய மெய்யுணர்வுக்கு நகர்கிறோம். அங்கு நாம் முகமது தின் முகமதின் படைப்புகளை அணுக்கமாகப் பார்வையிடுவோம்.
Transcript
Share