Stop 3
காட்சிப் பெட்டி 1: “அன்பு நண்பர்களே” கடிதம்
Archive
3203.காட்சிப் பெட்டி 1: “அன்பு நண்பர்களே” கடிதம்(0:00)
0:00
0:00
சென் எழுதிய கடிதம் ஒன்று இந்தக் காட்சி பெட்டியின் இடதுகோடியில் உள்ளது. அவர் ஜூன் 1951-ல் மலேயாவின் பினாங்குக்கு வந்த சிறிது நேரத்தில், பாரிஸில் உள்ள தனது நண்பர்களுக்கு அதை அனுப்பினார்.
மேலிடதுபுறத்தில் உள்ள முகவரியை உற்றுப் பாருங்கள்: 52 52 MK-13 ஆயர் இதாம் கிராமம், பினாங்கு, மலேயா. சென்னின் புதிய மலேய முகவரி அவரது கடிதங்களில் தோன்றியது இதுவே முதல் தடவையாக இருக்கலாம், இது அவர் பினாங்கில் இருப்பதைக் குறிக்கிறது.
பிரெஞ்சு மொழியில் எழுதப்பட்ட இந்தக் கடிதம், பினாங்குக்குச் சென்றபின் சென்னின் முதல் கருத்துப்பதிவை வெளிப்படுத்துவதில் மிகவும் முக்கியமானது. பினாங்கை அவர் “பூலோகச் சொர்க்கம்” என்று விவரித்தார்.
இங்கே, வெப்பமண்டலப் பழம் மற்றும் பூமத்திய ரேகைப் பகுதி இயற்கையெழில் காட்சிகள் போன்ற விஷயங்களில் சென் தனக்கிருந்த புதிய ஆர்வத்தைப் பற்றி எழுதுகிறார். மலேயாவின் இயற்கையெழில் காட்சிகள், மக்கள், பழங்கள் மற்றும் மலேயாவில் காணும் காட்சிகளைப் பற்றி அவர் மகிழ்ச்சியுடன் பேசுகிறார். “பழ மரங்கள் அதிகமான பழங்கள் நிறைந்தவை ... வாழைப்பழங்கள், தேங்காய்கள் மற்றும் பலவகையானவை. ஏறத் தைரியம் உள்ளவர்களை மகிழ்ச்சிப்படுத்த மரங்கள் தயாராக உள்ளன. இயற்கை செழிப்பானது மற்றும் பசுமையானது. என்ன பசுமை!” என்று அவர் எழுதுகிறார். இந்த அம்சங்கள் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவரது கலைக்கு ஊக்கமளித்துள்ளன.
கலைத் தூண்டுதலுக்கான உற்சாகத்தைத் தவிர, சென் தனது தொழில் வாழ்க்கையைப் பற்றிய புதுச்செய்திகளையும் வழங்குகிறார். பினாங்கிலுள்ள ஹான் சியாங் உயர்நிலைப் பள்ளியில் கலை ஆசிரியராகப் பணிபுரிவது பற்றிய செய்திகளை அவர் பகிர்ந்து கொள்கிறார், இது மலேயாவில் தனக்கான ஒரு வாழ்வாதாரத்தை எப்படி அவர் வளர்த்துக் கொண்டார் என்பதைக் காட்டுகிறது. கடிதம் எழுதுவதே பிரான்ஸ் மற்றும் சீனாவில் உள்ள நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் தனது உறவைப் பேணுவதற்கென சென்னுக்கு இருந்த ஒரு முக்கியமான வழியாகும்.