Stop 2
5202

இர்ராவாடி

கிம் லிம்
Artwork
இல்லை
Use headphones for a better listening experience and to be considerate to others.
5202.இர்ராவாடி(0:00)
0:00
0:00

மெதுவான கலை வழிகாட்டிக்கு உங்களை வரவேற்கிறோம். அதன் வழியாக, /கிம் லிம்மின் இர்ராவாடி, சிங்கப்பூர்த் தேசியக் கலைக்கூடம் உங்களுக்குக் கொண்டுவருகிறது.

 

மெதுவாகப் பார்த்தல் மற்றும் கவனமுடைமை ஆகிய கொள்கைகளால் உந்தப்பட்டு, மெதுவான கலை வழிகாட்டி, கலைக்கூடத்திலுள்ள ஒரு கலைப்படைப்பின் வாயிலாக உங்களை ஓர் ஆழ்ந்த நிலைக்கு இட்டுச்செல்லும். இந்த அனுபவம், மெதுவடைதல், காணொளிக் கலையைப் பார்ப்பதற்கு நேரத்தைச் செலவழித்தல், அதை உணர்வுடனும், ஆழ்ந்து ஆராய்ந்தும் உள்வாங்குதல் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த வழிகாட்டி, கவனமுடைமை நடைமுறைகளை வெளிப்படுத்தி, கலையைப் புலன்கள் சார்ந்த மற்றும் பிரதிபலிக்கிற அனுபவத்தைப் பெறும் வகையில் சிந்திக்க உங்களுக்கு அழைப்பு விடுக்கிறது.

 

கவனமுடைமை அடிப்படையிலான இந்த அனுபவம் மிகவும் தன்னாய்வு மிக்கது என்பதால், அது உங்கள் எண்ணங்களுடனும் உணர்ச்சிகளுடனும் உங்களைக் கலந்துகொள்ள அழைக்கிறது; அதை, சில வேளைகளில் கடுமையானதாகவும் திணறவைப்பதாகவும் உணரலாம். இன்று அதுதான் உங்கள் நிலைமை என்றால் தயவுசெய்து இந்த ஒலி அனுபவத்திலிருந்து விலகி, அமைதி அறைக்குச் செல்லுங்கள் அல்லது பாதுகாப்பாக ஓய்வெடுக்க முடியும் என்று நீங்கள் உணரும் இடத்திற்குச் செல்லுங்கள்.

 

மெதுவான கலை வழிகாட்டியுடனான உங்கள் அனுபவத்தின் முடிவில், நீங்கள் அந்தக் கலைப்படைப்புடன் ஓர் ஆழமான, உணர்வுபூர்வமான தொடர்பைக் கண்டுகொள்வீர்கள் என்று நம்புகிறோம். மேலும், நீங்கள் இந்தக் கணத்தில் நிலையாகவும் அமைதியாவும் உணர்வீர்கள் என்றும் நம்புகிறோம்.

 

இந்த ஒலி வழிகாட்டி, உங்களை இரண்டு நிறுத்தங்களுக்கு இட்டுச் செல்லும் – முதலில் அமைதி அறை; அதன் பிறகு, கண்காட்சிக் கூடங்களுக்குள் உள்ள கலைப்படைப்பு. உங்கள் அனுபவத்தின் ஊடே, கலைப்படைப்பு இருக்கும் இடத்தை அறிவது உள்பட உங்களுக்கு உதவி தேவைப்பட்டால் நீங்கள் எங்கள் நட்பான முன்சேவை முகப்பு ஊழியர்களை நாடலாம்.

 

உங்கள் சுற்றுலாவைத் தொடங்க நகர மண்டபப் பிரிவின் கீழ்த்தளம் 1-ல் உள்ள அமைதி அறைக்குச் செல்லுங்கள்.

 

நீங்கள் அமைதி அறைக்குச் சென்றபிறகு, அடுத்த தடத்தில் உள்ள “பிளே”யை அழுத்துங்கள்.

 
நாம் இப்போது சிங்கப்பூர்க் கலைஞர் கிம் லிம் படைத்தஇர்ராவாடி சிலைக்கு வந்துவிட்டோம். நாம் இந்தக் கலைப்படைப்பை ஆராயும் வேளையில் உங்களுக்கு வசதியான முறையில் கட்டுப்பாடின்றி நீங்கள் நகரலாம். இந்தக் கலைப்படைப்புக்கு முன்னால் கலைக்கூடத் தரையில்கூட நீங்கள் அமரலாம்.

 

ஒரே மாதிரியான பதினெட்டுத் தேவதாரு மரக்கட்டைகள், ஒவ்வொன்றும் 80 சென்டிமீட்டர் நீளத்தில் இருக்கின்றன. அவை ஒவ்வொரு வரிசையிலும் ஒன்பது கட்டைகளாக, இரண்டு வரிசைகளில் அடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு கட்டையும் மற்றொன்றின் மீது சாய்ந்துள்ளது. இரண்டு வரிசைகளின் இறுதிக் கட்டைகள் கலைக்கூடச் சுவரில் சாய்ந்துள்ளன.

 

இந்தக் கலைப்படைப்பை நாம் மெதுவாகப் பார்க்கத் தொடங்குவதற்குமுன், அதை இடத்தை ஆக்கிரமிக்கும் ஒரு சடப்பொருளாக நாம் காண்போம். இந்தச் சிலையின் வெளிவடிவத்தைத் தொடர்ந்து செல்ல உங்கள் கண்களுக்கு அழைப்பு விடுங்கள்; அதே வேளையில் இந்தக் கலைப்படைப்பில் உள்ள பல்வேறு கோடுகளையும் கோணங்களையும் கவனியுங்கள். ஒன்று மற்றதன் மீது சாய்ந்துள்ள இந்தத் தேவதாரு மரக்கட்டைகள் ஏற்படுத்தும் வடிவமைப்பையும் அவை உருவாக்கும் மூலைவிட்டக் கோடுகளையும் கவனியுங்கள். ஒவ்வொரு கட்டையும் அதற்கு முன் உள்ள கட்டையுடன் ஏற்படுத்தும் கோணத்தின் அதிகரிக்கும் மாற்றத்தையும், அது சுவரில் சாய்ந்துள்ள கட்டையுடன் ஏற்படுத்தும் மிகவும் செங்குத்தான கோணத்தையும் கவனியுங்கள்.

 

சிலையைச் சுற்றி மெதுவாக நடந்து அதனை அனைத்துக் கோணங்களில் இருந்தும் பாருங்கள். ஒரு புதிய நண்பரை வரவேற்பதுபோல ஒவ்வொரு தேவதாரு மரக்கட்டைக்கும் வரவேற்புத் தாருங்கள். தொலைவிலிருந்து பார்க்கும்போது ஒரேமாதிரித் தோன்றினாலும், அவை ஒவ்வொன்றும் ஒன்று மற்றதிலிருந்து வேறுபட்டுத் தனித்தன்மைமிக்க வேலைப்பாட்டுடன் இருப்பதை அங்கீகரியுங்கள்.

 

இப்போது இந்தக் கலைப்படைப்பை வெவ்வேறு உயரங்களில் இருந்து கவனியுங்கள். உங்களால் குனிய முடிந்தால் அல்லது உட்கார முடிந்தால், கீழ்நிலையிலிருந்து அது எப்படி வேறுபட்டுத் தோற்றமளிக்கிறது என்பதைக் காணுங்கள். வெளிச்சம் மாறிமாறி, சிலையின் நிழல்களுடன் விளயைடுவதைக் கவனியுங்கள். நீங்கள் சுற்றி வரும்போது, கலைப்படைப்பும் மாறுவதைக் கவனியுங்கள்; அதன் நிழல்களைப் பல்வேறு தோற்றங்களில் பாருங்கள்.

 

இந்தக் கட்டைகளில் ஒன்றை நீங்கள் கையில் எடுப்பதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள். அதை உங்கள் கைகளில் எப்படி உணர்வீர்கள்? அந்தக் குளிர்ச்சியான மரக்கட்டையில்உங்கள் விரல்கள் படுவதைக் கற்பனை செய்து கொள்ளுங்கள். முழுவதுமாக ஒரு வழுவழுப்பான மேற்பரப்பை உணர்வீர்களா அல்லது சொரசொரப்பை உணர்வீர்களா? நீங்கள் தொடும்போது குளிர்ச்சியை உணர்த்துமா? அதன் மூலைகள் உங்கள் விரல்களைப் படரவிட அதிகக் கூர்மையாக இருக்குமா அல்லது நீங்கள் எளிதாகக் கையாளவும் விளையாடவும் நன்கு இழைக்கப்பட்டு இருக்குமா? அது எளிதில் தூக்கிச் செல்லும் வகையில் எடை குறைவாக இருக்குமா அல்லது உங்கள் கைகளில் கடினமாகவும் கனமாகவும் இருப்பதை உணர்வீர்களா?  

 

இந்தக் கட்டைகள், கலைஞரின் சொந்தக் கைகளால் எவ்வாறு கவனமுடன் வேண்டும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்பதை எண்ணிப் பாருங்கள். கலைஞர் கிம் லின் சிங்கப்பூரில் பிறந்து அவரது குழந்தைப் பருவத்தின் பெரும்பகுதியை பினாங்கிலும் மலாக்காவிலும் கழித்தவர். ஒரு கலைஞராக வாழ்க்கைத் தொழிலை அமைத்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தமது 18-வது வயதில் லண்டனுக்குச் சென்று மத்திய செயிண்ட் மார்ட்டின் பயிற்சிக்கூடத்தில், மரப் வேலைப்பாட்டில் கவனம் செலுத்தி, இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றார். 

 

இப்போது இந்தக் கட்டைகள் சிலவற்றில் காணப்படும் இருண்ட நீள்வட்டக் குறியீடுகளை நாம் அணுக்கமாகக் காணலாம். இவை மரக் கணுக்கள்; இந்த மரம் அதைச் சுற்றி வளர்வதற்குமுன் அந்த இடத்தில் ஒரு கிளை இருந்ததை அது குறிக்கிறது. காலக்கிரம வளையங்களுடன் மரத்தண்டு தொடர்ந்து வளரும்போது அது அந்தக் கணுவைச் சுற்றி வளர்ந்து இந்தத் தனித்தன்மைமிக்கக் குறியீடுகளையும் கண் வடிவங்களையும் மரத்தில் உருவாக்குகிறது. மரக் கணுக்கள் வழக்கமாக கடினமான மேற்பரப்பைக் கொண்டிருக்கும்; ஏனெனில் அது அதைச் சுற்றியுள்ள மரத்தைவிட வேறு திசையில் வளர்ந்திருக்கும்.

 

இப்போது உங்கள் உடலில் எந்தப் பகுதியிலாவது மரத்திலுள்ள கணுக்களைப் போல் இருக்கின்றனவா என்று கவனியுங்கள். ஒருவேளை உங்கள் கழுத்து அல்லது தோள்களில், அல்லது உங்கள் மார்பில் அல்லது கீழ் முதுகில் அவற்றை நீங்கள் உணரலாம். நீங்கள் மூச்சை உள்ளிழுக்கும்போது அந்தப் பகுதிகளுக்கு வெதுவெதுப்பையும் கனிவையும் பரப்பிட முடியுமா என்று பாருங்கள். பின்னர் நீங்கள் மூச்சை வெளியே விடும்போது இந்தப் பகுதிகளை மென்மைப்படுத்தவும், தளர்த்தவும், இலகுவாக்கவும் முடியுமா என்று பாருங்கள். இதே மாதிரி இன்னும் சில மூச்சுகளை உங்களுக்குரிய நேரத்தில் செய்யுங்கள்.  உள்மூச்சு, வெளிமூச்சு. உள்மூச்சு, வெளிமூச்சு.

 

கிம் லிம் 1960 முதல் 1979 வரை உருவாக்கிய படைப்புகள் பெரும்பாலும் கண்ணாடியிழை, உருக்கு, அல்லது இர்ராவாடி என்னும் இந்தச் சிற்பத்தைப் போல மரம் ஆகியவற்றில் செய்யப்பட்டன. இர்ராவாடி மியன்மாரின் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி ஓடும் ஓர் ஆற்றின் பெயர். அது அந்த நாட்டின் மிகப் பெரிய ஆறு; அத்துடன் வரலாற்றுக் காலம் முழுவதும் அது வர்த்தகத்திற்கும் போக்குவரத்திற்கும் முக்கியமாக விளங்கி வருகிறது. தமது படைப்புகளைப் பார்க்கும் எவரும் எவ்வாறு அவற்றுடன் தொடர்புபடுத்திக் கொள்வர் என்பதை உணர்ந்திருந்த லிம், எடை, கனஅளவு ஆகியவற்றை இரண்டாம்பட்சமாக்கி இடம், தாளம், ஒளி ஆகியவற்றை எவ்வாறு பொருளாக்கம் செய்யலாம் என்பது குறித்துத் தொடர்ந்து கடுமையாக ஆய்வு செய்தார்.

 

கவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட இந்த மரக்கட்டைகளின் சமநிலையைக் கவனியுங்கள்; சமநிலையை உறுதிப்படுத்த ஒவ்வொரு கோணமும் கவனத்துடன் அளவிடப்பட்டுள்ளது. இந்தக் கட்டைகளில் ஒன்றை அகற்றினால் மற்றவை சரியக்கூடும். இந்தக் கலைப்படைப்பு உங்கள் முன்னால், தரையில் சமநிலைப் படுத்தப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது, அது நிலையற்றதாகத் தோன்றுகிறதா, ஒருமுறை தொட்டாலே முழு அமைப்பும் விழுந்துவிடும் என்று தோன்றுகிறதா? அல்லது இந்த அமைப்பு நிலையாக, உறுதியாக இருக்கிறது என்று தோன்றுகிறதா?

 

நீங்கள் இந்தத் தேவதாரு மரக்கட்டைகள் ஒன்றின்மீது ஒன்று சாய்ந்துள்ளதை, ஒன்று மற்றொன்றுடன் தொடர்பில் உள்ளதைப் பார்க்கும்போது, முழு அமைப்பின் நிலைத்தன்மையும் ஒவ்வொரு தனிக் கட்டையைச் சார்ந்துள்ளது என்பதைக் கவனியுங்கள். இதில் நீங்கள் இன்று, இந்த நொடியில் எந்தக் கட்டை என்று உணர்கிறீர்கள்? நீங்கள் ஒரு சமூகத்தால் நன்கு ஆதரவளிக்கப்பட்ட, உங்களை நேசிக்கும், உங்களைத் தாங்கிப்பற்றியிருக்கும், அவர்களின் பரிவையும் தழுவலையும் சார்ந்துள்ள, இந்தச் சிற்பத்தின் முன்னணியில் உள்ள கட்டையா?

 

அல்லது ஒருவேளை, மற்ற கட்டைகளின் எடையைத் தாங்கிக்கொண்டு, முழு அமைப்பையும் தாங்கும் என்றும் தொடர்ந்து செயல்பட வழிவகுக்கும் என்றும் மற்ற கட்டைகள் நம்பும் கடைசிக் கட்டை என்று உணர்கிறீர்களா? ஒருவேளை நீங்கள் அதிக எடையைத் தாங்குவதாக, உங்கள் தட்டில் அதிகம் இருப்பதாக உணர்கிறீர்களா?

 

அல்லது ஒருவேளை நீங்கள் முதல் கட்டைக்கும் கடைசிக் கட்டைக்கும் நடுவில் வசதியாக இருந்துகொண்டு ஆதரவையும் நல்ல சக்தியையும் தருவதையும் பெறுவதையும் செய்யும் நடுவில் உள்ள ஒரு கட்டையாக உங்களை உணர்கிறீர்களா?

 

நீங்கள் எந்தக் கட்டை என்று உங்களை உணர்ந்தாலும் பரவாயில்லை. நாம்

மற்றவர்களுக்கு ஆதரவளிக்கவும் நமக்கு ஆதரவு பெறவும் மாறி மாறிச் செயல்படுவோம் என்பதை அங்கீகரிக்க உங்களை அனுமதித்துக் கொள்ளுங்கள்; ஆகவே இந்த நொடியில் நீங்கள் எத்தகைய உணர்ச்சியை உணர்ந்தாலும் அது வரவேற்கத்தக்கது. உங்கள் முன்னால் உள்ள இந்தச் சிற்பத்தைப் பற்றி ஆழ்ந்து சிந்தித்து, நாம் ஒருவர் மற்றவருடன் எந்த அளவுக்கு இருவழித் தொடர்பிலும் சார்ந்தும் இருக்கிறோம் என்பதை உணரலாம். நம் ஒவ்வொருவருக்குள்ளும் மகிழ்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான வேட்கை ஆழமாகப் பதிந்துள்ளது. 

 

உங்கள் விழிப்புணர்வை உங்கள் மூச்சுக்குக் கொண்டுவந்து, உங்கள் இதயம் இப்போது எவ்வாறு உணர்கிறது என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் கையை இதயத்தின் மீது வைத்துக்கொண்டு, அது துடிக்கும்போது அதன் வலிமையை உணரவும் உங்கள் கையின் வெப்பம் உங்களின் அன்புமிகு இருப்பிற்குத் தொடர்பை ஏற்படுத்த அனுமதிக்கவும் விரும்பலாம்.

 

கனிவு, இதம், நல்வாழ்த்துக் கூறும் சொற்களை உங்களுக்கு நீங்களே முணுமுணுத்துக்கொள்ளுங்கள்.

நான் உள் மற்றும் வெளிப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருப்பேனாக.

நான் உடல்நலத்துடன் இருப்பேனாக.

நான் அமைதியுடனும் இலகுவாகவும் இருப்பேனாக.

நான் மகிழ்ச்சியுடன் இருப்பேனாக.

நான் அன்பு செலுத்தப்பட்டு, பரிவுகாட்டப்படும் நபராக இருப்பேனாக.

நான் என்னைச் சுற்றிக் களிப்பைக் காண்பேனாக.

 

இப்போது நீங்கள் விரும்பினால் நீங்கள் அன்பு செலுத்தும் ஒருவரை, அல்லது நல்வாழ்த்துகள் தேவைப்படும் ஒருவரை நினைவுகூரலாம். இந்தச் சிற்பத்தில் உள்ள கட்டைகள் ஒன்றையொன்று ஆதரிப்பதுபோல், உங்கள் வாழ்க்கையில் நீங்கள் ஆதரிக்கும் அலலது உங்கள் ஆதரவு தேவைப்படும் ஒருவரை நினைத்துக் கொள்ளுங்கள். இந்த நல்வாழ்த்துகளை அமைதியாக அவருக்கு அனுப்பி வையுங்கள் அல்லது உங்கள் சொந்தச் சொற்றொடர்களை நீங்கள் பயன்படுத்தலாம்.

நீங்கள் உள் மற்றும் வெளிப் பாதிப்பிலிருந்து பாதுகாப்பாக இருப்பீராக.

நீங்கள் உடல்நலத்துடன் இருப்பீராக.

நீங்கள் அமைதியுடனும் இலகுவாகவும் இருப்பீராக.

நீங்கள் மகிழ்ச்சியுடன் இருப்பீராக.

நீங்கள் அன்பு செலுத்தப்பட்டு, பரிவுகாட்டப்படும் நபராக இருப்பீராக.

நீங்கள் உங்களைச் சுற்றிக் களிப்பைக் காண்பீராக.

 

நிறைவாக, நாம் பரிவு காட்டும் ஒரு சமூகத்திற்கும் இந்த நல்வாழ்த்துகளை அனுப்பி வைப்போம்.  உங்கள் இர்ராவாடியில் உள்ள மற்ற கட்டைகள் யார்? உங்கள் ஆழ்மனத்திலிருந்து முணுமுணுங்கள். இந்த நல்வாழ்த்துகளை இந்தப் பிரபஞ்சத்திற்கு அனுப்புவோம்.

நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போமாக.

நாம் அனைவரும் உடல்நலத்துடன் இருப்போமாக.

நாம் அனைவரும் அமைதியுடனும் இலகுவாகவும் இருப்போமாக.

நாம் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்போமாக.

 

இந்த வார்த்தைகள் உங்களை நிரப்பி, மற்றவர்களுடன் உங்களைத் தொடர்புபடுத்தட்டும்.

 

நீங்கள் தயாராய் இருக்கும்போது, உங்கள் சொந்த நேரத்தில், இந்த நடைமுறையை விட்டுவிடுங்கள். உங்கள் மூச்சுவிடுதலுக்கு உங்கள் விழிப்புணர்வை மீண்டும் கொண்டுவாருங்கள். உங்கள் மூச்சின் தாள லயத்தை உணருங்கள்.  மேலும் சில மூச்சுகளைவிட்டு இந்த நடைமுறையை முடித்து வையுங்கள்.

 

நாம் இப்போது இந்த மெதுவான கலை வழிகாட்டி அங்கத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம்.

 

நீங்கள் இந்த மெதுவான கலை வழிகாட்டியால் மகிழ்ச்சி அடைந்திருந்தால், வெவ்வேறு கலைப் படைப்புகளைப் பற்றிய எங்கள் மற்ற அங்கங்களையும் நீங்கள் காணலாம். ஒவ்வொரு மெதுவான கலை வழிகாட்டியும் தனித்தன்மையுடன் மெதுவாகப் பார்க்கும் வகையிலும், நினைவில் கொள்ளத்தக்க நடைமுறைகளுடனும் நீங்கள் அந்தக் கலைப்படைப்பை அர்த்தமுள்ள வகையில் காண உதவும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. மெதுவான கலை வழிகாட்டியில் இடம்பெற்றுள்ள கலைப்படைப்புகள் அனைத்தும் பரிவுத் திரட்டு எனும் தொகுப்பைச் சேர்ந்தவை.  தேசிய திரட்டைச் சேர்ந்த அந்தக் கலைப்படைப்புகள் நோய்தீர்க்கும் பயன்பாட்டிற்காகக் கருப்பொருள் ரீதியில் தொகுக்கப்பட்டுள்ளன.

 

இப்போது கலைக்கூடத்தில் உங்கள் பயணத்தைத் தொடர்ந்து, நேரத்தைக் கருதாமல் மெதுவாகச் சென்று உங்களைச் சுற்றியுள்ள ஓவியங்களைப் பார்த்து ரசிக்க உங்களை அழைக்கிறோம்.

Transcript
Share