Stop 9
தலைப்பு இடப்படாதது
ஹோ ஹோ இங்
Artwork
209.தலைப்பு இடப்படாதது (0:00)
0:00
0:00
ஹோ ஹோ இங் படைத்த இந்த எண்ணெய் வண்ண ஓவியத்தில், அடுக்கடுக்கான கருப்பு வடிவங்கள் ஏறத்தாழ படத்தின் முழுப்பரப்பையுமே ஆக்கிரமித்திருக்கின்றன. அந்த வடிவங்கள் சீராகவும் நிலையாகவும் அமையப்பெற்று, சிக்கலான தொகுப்பை உருவாக்குகின்றன. மாறாக, எண்ணெய் வண்ண ஓவியத்தின் பின்புலமோ நிறத்திண்மை மற்றும் வண்ணச்சாயல் போன்றவற்றின் தோற்ற நுணுக்கங்களை வெளிப்படுத்துகிறது.
1960-களில், சிங்கப்பூரில் கருத்தியல் கலைப்படைப்புகளின் வளர்ச்சிக்கு ஹோ ஹோ இங் முக்கியப் பங்கு வகித்தார். இந்தப் படைப்பு, ஓவியரின் கருத்தியல் ஓவியத்தின் ஆரம்பகட்டப் பரிசோதனைகளை எடுத்துக்காட்டுவதோடு, புதுமையைப்பற்றிய அவரது எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறது. அவரது முந்தைய கருத்தியல் ஓவியங்களோடு ஒப்பிடும்போது, இந்த ஓவியம், கருப்பொருள் அமைப்பு, தூரிகைக் கீற்றுகள் மற்றும் சாயல்களைப் பயன்படுத்தியிருக்கும் விதம் என, குறிப்பிடும்படியான ஒரு முதிர்ச்சியைக் காட்டுகிறது. கையெழுத்துக்கலையின் முக்கியக் கூறுகளைக் கருத்தியல் அலங்காரமாக உருமாற்றும் விதத்தில், எதிர்காலத்தில் ஹோ படைக்கவிருந்த முக்கியப் புத்தாக்கப் படைப்பு ஒன்றுக்கு இது ஒரு முன்னோட்டமும் கூட.
ஹோ அவர்கள் கருத்தியல் ஓவியத்தின் முன்னேற்றத்திற்காக ஆற்றிய பணி, சிங்கப்பூர்க் கலைகளின் வரலாற்றுச் சிறப்புமிக்க மறுமலர்ச்சிக்கு ஒரு முக்கியப் பங்களிப்பாக அனைவராலும் போற்றப்படுகிறது. 2012-ஆம் வருடம், சிங்கப்பூர் அரசால் அவருக்கு கலாச்சாரப் பதக்கம் வழங்கப்பட்டது.