Stop 7
தேசிய மொழி வகுப்பு
சுவா மியா டீ
Artwork
207.தேசிய மொழி வகுப்பு (0:00)
0:00
0:00
இந்த ஓவியத்தில், மலாய் மொழியைக் கற்கும் சீன மாணவர்கள் குழு ஒன்று சிறிய, மங்கலான வெளிச்சம் உள்ள வகுப்பரையில் ஒரு மேசையைச் சுற்றி நெருங்கி அமர்ந்துகொண்டிருப்பது காட்டப்பட்டுள்ளது. ஆசிரியரும், மாணவர்களும் ஓவியத்தின் பெரும் பகுதியை ஆக்கிரமித்திருப்பதன் மூலம், அவர்களே இந்த ஓவியத்தில் கவனத்தை ஈர்க்கும் முக்கிய மையம் என்பது சந்தேகத்திற்கு இடமின்றித் தெரிகிறது. ஆசிரியரின் பின்னால் உள்ள கரும்பலகையில் தொடக்கநிலை மலாய்ச் சொற்றொடர்கள் எழுதப்பட்டு உள்ளன. அதில் ஒரு வாக்கியமான “சியாப்பா நாமா காமூ” என்பதற்கு “உன் பெயர் என்ன?” என்று பொருள்.
சுவா மியா டீயின் சிறந்த மரபுச்சின்னப் படைப்புகளில் ஒன்றான ‘தேசிய மொழி வகுப்பு’, தேசியவாத உணர்வுகளைப் பிரதிபலிப்பதோடு, சிங்கப்பூர் வரலாற்றின் முக்கியமான கட்டங்களையும் எடுத்துக்காட்டுகிறது. 1959-ல் வரையப்பட்ட இது, ஆங்கிலேய ஆட்சியிலிருந்து நீண்டநாள் காத்திருந்து பெற்ற சுதந்திரத்தைக் கொண்டாடுவதைக் குறிக்கிறது. தேசிய ஒருமைப்பாட்டின் அவசியமானது, கலாச்சார அமைச்சு மலாய் மொழியைப் புதிய தேசிய மொழியாக அறிவிக்க வழிவகுத்தது.
இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு உள்ள காலங்களில் இருந்த சிங்கப்பூர் கலையின் தனிச்சிறப்பாக, பெரும்பாலும் ஆரம்பநிலையில் இருந்த, சமூக நிதர்சனங்களைக் காட்டும் கலை இயக்கங்கள் இருந்தன. அவை சுவா மியா டீ போன்ற இளைய தலைமுறையினரின் ஆதிக்கத்தில் இருந்தன. அவர்கள், இடதுசாரிக் கலாச்சாரக் கொள்கை நெறிகளால் உந்தப்பட்டு, கலைப்படைப்புகளை சமூகப் பொறுப்புணர்வோடு உருவாக்கினார்கள். அவை சமூகச் சீர்திருத்தத்திற்கு உதவும் என்று அவர்கள் கருதினார்கள். கொந்தளிப்பான 1950-களில், இக் கலைஞர்கள் தாங்கள் படைத்த குறிப்பிடும்படியான கலைப்படைப்புகளில், விடுதலை மற்றும் சுதந்திர தாகம் வெளிப்படுமாறு உருவாக்கினார்கள். சமூக நிதர்சனங்களைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டும் தேசிய மொழி வகுப்பு இதற்கு ஒரு முன்னுதாரணம் ஆகும்.