Stop 6
மேளக்காரர்
யே சீ வெய்
Artwork
206.மேளக்காரர் (0:00)
0:00
0:00
இந்த ஓவியத்தில், ஆடைகளின் சித்திரவேலையை நினைவுப் படுத்தும் ஒரு பின்னணியில், ஒரு உருவம் கையில் மேளத்துடன் உட்கார்ந்திருக்கிறது. இடது பக்கத்தில், இரண்டு மண் சாடிகள் இருக்கின்றன. இங்கே, அந்த மேளக்காரரின் கம்பீரமான கருத்த உருவம் மிகுந்த நாகரீத்துடனும், நீண்ட கைகால்களுடனும், எளிமையான முக அம்சங்களுடனும் வரையப்பட்டுள்ளது. ஒரு உருவகமான இந்த ஓவியம், ஒருவிதமான தொன்மையையும் பிரதிபலிக்கிறது. அந்தக் கருத்த உருவமும், எதிர்மறை எல்லைக்கோடுகளை வெள்ளை நிறத்தில் வரைந்து இருப்பதும், சீன மை ஓவிய மரபை நினைவுபடுத்துகின்றன.
1960-களில், கலைஞர் யே சீ வெய் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு அடிக்கடி பயணம் மேற்கொண்டார். அந்தப் பயணங்களின் போது அங்குள்ள துணிகள், மரச்சிற்பங்கள் மற்றும் பழைய சீன மண் பாண்டங்கள் உள்ளிட்ட வேலைப்பாடமைந்த பொருட்களை அவர் சேகரித்தார். இந்த ஓவியத்தின் நாகரிகமான வெளிப்பாடுகள், அத்தகைய வேலைப்பாடமைந்த பொருட்களின் தாக்கங்களால் ஏற்பட்டதோடு, பாரம்பரியக் கலைப்பண்புகள் மற்றும் படிவங்கள் மேலிருந்த கலைஞரின் ஆர்வத்தையும் வெளிக்காட்டுகின்றன. அடர் பழுப்புநிறம், மங்கிய சாம்பல்நிறம், நீலமும் பச்சையும் கலந்த வண்ணம், மற்றும் வெள்ளை எல்லைக்கோடுகள் என அவர் பயன்படுத்திய தனித்துவம் வாய்ந்த வண்ணக்கலவைகள், அநேகமாக தென்கிழக்கு ஆசிய நாடுகளின் பயணத்தின் போது அவர் சேகரித்த துணிகளின் தாக்கமேயாகும்.