Stop 5
கலைஞரும், மாதிரியும்
லியூ காங்
Artwork
205.கலைஞரும், மாதிரியும் (0:00)
0:00
0:00
இந்த ஓவியத்தில், லியூ காங் ஒரு ஓவியத்தை உருவாக்குவதற்கான செயல்முறையைப் பற்றிய அவருடைய எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். கீழ்நோக்கிச் சரிந்த மலைத்தொடர்களின் பின்னணியில், சாரோங் ஆடை அணிந்த மாதிரியை ஒரு ஓவியர் செய்வது போல் வரைந்திருக்கிறார்.
மேசையில் உள்ள தேநீர்க் கோப்பைகளும், பிரம்பு நாற்காலியின் கீழே காணப்படும் வெற்று காகிதச்சுருள்களும், படைப்பு வெளிப்படுத்தும் ஆசுவாசமான சூழலுக்கு வலுச் சேர்க்கின்றன. லியூ காங் 1952-ல் ஒவியம் வரைவதற்காக மேற்கொண்ட தனது இந்தோனேசியப் பயணத்தை நினைவுகூறும் வகையில் இந்த ஓவியத்தை உருவாக்கினார். மேலும், இங்கே ஓவியமாக வரையப்பட்டிருக்கும் கலைஞர் அவரது நண்பரும், சக ஓவியக்கலைஞருமான சென் வென் ஸி ஆவார்.
இங்கே, அவருடைய ஓவியங்களில் வழக்கமாக இருக்கும் அவரின் முத்திரையான கருப்பு எல்லைக்கோடுகளுக்குப் பதிலாக, வெள்ளை எல்லைக்கோடுகள் இருப்பது, இந்த வட்டாரத்திற்குரிய பாத்திக் ஓவியத்தின் தாக்கமாக இருக்கலாம். அடர்ந்த மற்றும் அதற்கு முரண்பாடான வண்ணங்களின் அடுக்கைப் பயன்படுத்தியிருப்பது, ஓவியத்திற்கு ஒரு சிறந்த வடிவமைப்பு போன்ற தோற்றத்தையும், அரிதான தரத்தையும் கொடுக்கிறது. ஓவியரையும், ஓவியம் வரையும் செயல்முறையையும் ஒரு கருப்பொருளாக்கி, கவனத்தை அவற்றின்மேல் ஈர்ப்பதாக இந்த ஓவியம் வரையப்பட்டிருப்பது, ஓவியக்கலையின் தன்னைத்தானே போற்றும் தன்மையைப் பறைசாற்றுவதாய் உள்ளது.
வெளிப்புறத்தில் ஓவியம் வரைவதற்கு லியூ காங் அளித்த முக்கியத்துவத்தையும் இது எடுத்துக்காட்டுகிறது. அத்தோடு, ஓவிய அரங்கத்தினுள் இருந்துகொண்டே வரையும் வழக்கமான முறைக்கு முற்றிலும் மாறாக, இங்கே ஓவியர், நேரடியாக தனது கருப்பொருளின் முன்பு இருக்கிறார்.