Stop 3
எபிபெனி
ரிச்சர்ட் வாக்கர்
Artwork
203.எபிபெனி (0:00)
0:00
0:00
இங்கே ஒரு மரப்பலகையில், கலைஞர் ரிச்சர்ட் வாக்கரால் சித்தரிக்கப்பட்டுள்ள எபிபெனி, இயேசு முதன் முதலில் காட்சிதரும் நிகழ்ச்சியைக் கொண்டாடும் விதமாகப் படைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டமைப்பின் நடுவில் நாம் மேரியையும், குழந்தை இயேசு ஒளிவட்டத்துடன் இருப்பதையும் பார்க்கலாம். இடதுபக்கத்தில் கிழக்குத் திசையிலிருந்து வந்திருந்த மூன்று ஞானிகளைப் பார்க்கலாம்.
முதல் கண்ணோட்டத்தில், இது ஒரு வழக்கமான இயேசுநாதர் பிறப்பைக் காட்டும் காட்சியாகத் தெரிகிறது. ஆனால் கலைஞர் இந்த ஓவியத்தில், கன்னி மேரியை ஆசிய அம்சங்களுடனும், அதில் ஒரு ஞானியைப் பாரம்பரிய சீன அறிஞர் போன்ற ஆடையலங்காரத்துடனும் வரைந்திருக்கிறார். இதன்மூலம், இந்தப் படைப்பில் உள்ளூர்ச் சூழலைப் புகுத்தியிருக்கிறார்.
சிங்கப்பூரில் ஜப்பானிய ஆக்கிரமப்பின் போது இந்த ஓவியம் வரையப்பட்டது. பரிசுத்தப் பிரார்த்தனைச் சேவைகளுக்காக, சாங்கி சிறைச்சாலைத் தேவலாயத்தின் ஒரு புதுமையான மாடத்தின் பின்னால் ஓவியத்தை வைப்பதற்காகவே கலைஞர் திட்டமிட்டு வரைந்திருக்கலாம். போருக்குப் பின்னால் இந்த ஓவியம் சிங்கப்பூர் மேற்றிராசனத்திடம் கொடுக்கப்பட்டு, பின்னர் தேசியத் தொகுப்பிற்குத் தானமாக அளிக்கப்பட்டது.