Stop 13
உத்தமா – வரலாற்றில் ஒவ்வொரு பெயரும் நான்
ஹோ ஸு நயேன்
Artwork
213.உத்தமா – வரலாற்றில் ஒவ்வொரு பெயரும் நான் (0:00)
0:00
0:00
“உத்தமா – வரலாற்றில் ஒவ்வொரு பெயரும் நான்” என்பது ஒரு படம் மற்றும் 20 எண்ணெய் வண்ண ஓவியங்களைச் சேர்த்து உருவாக்கப்பட்ட ஒரு தொகுப்பாகும்.
13-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் “சிங்கப்பூரா” அரசை நிர்மானித்த, பெலம்பாங்கிலிருந்து வந்த ஶ்ரீவிஜயப் பேரரசின் இளவரசனான, சங் நில உத்தமா பற்றிய புராணக்கதையை விவரிக்கிறது இந்தத் தொகுப்பு. “சிங்கப்பூர்” என்கின்ற பெயர் “சிங்க நகரம்” என்று பொருள்படும் “சிங்கப்பூரா” என்ற மலாய் வார்த்தையிலிருந்து வந்ததாகும். துண்டுக் கதைகள், தான் கேட்டிருந்த செவிவழி வரலாற்றுக் கதைகள், தானே பலமுறை படித்துத் தெரிந்துகொண்ட மலேயாவின் வரலாற்றுப் பதிவுகள் ஆகியவற்றின் அடிப்படையில், உத்தமாவின் கதையை அவர் சொல்கிறார்.
சிங்கப்பூரைக் குறித்து காலனிக் காலத்திற்கு முந்தைய காலத்தைக் குறிப்பிட்டு சொல்லப்படும் விசயங்கள், சர் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ், அவரது நாட்டைச் சார்ந்த வில்லியம் பார்கர் ஆகிய இருவரும் வந்து சேர்ந்ததிலிருந்து கதை ஆரம்பமாவதாகப் பொதுவாகச் சொல்லப்படும் வரலாற்றுக் குறிப்புகளுக்கு மாறாக இருப்பது சுவாரசியமாக உள்ளது.
இது ஒரு தொகுப்பாக ஹோவால் எழுதப்பட்டிருந்தாலும், உத்தமா, கலைக்கண்ணோட்டத்தின் வழியாக வரலாறுப் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. எவ்வாறு கடந்த கால வரலாறு மாற்றியமைத்து உருவாக்கப்படுகிறது போன்ற கடுமையான கேள்விகளுக்கு இது அடித்தளம் போடுகிறது. கலைஞரைப் பொறுத்தவரை, வரலாறு மாற்றம்பெறக் கூடியது. உத்தமா, அன்மைய சிங்கப்பூர்க் கலை வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை ஏற்படுத்தியுள்ளது.