Stop 2
சுய உருவப்படம்
ஜார்ஜெட் சென்
Artwork
202.சுய உருவப்படம் (0:00)
0:00
0:00
மிக அருகாமையில் வரையப்பட்ட இந்த சுய உருவப்படத்தில், ஜார்ஜெட் சென் மிக முனைப்பாக உங்களைப் பார்த்து நேரடியாக உரையாடுவதுபோல் உள்ளது. அவருடைய கூர்மையான குத்துவது போன்ற தீட்சண்யமான பார்வையும், லேசாக உயர்த்தப்பட்ட நாடியும், பெருமிதத்தையும், மனஉறுதியையும் வெளிக்காட்டுகிறது. அந்தக் காலகட்டத்தில் அவருடைய சொந்த வாழ்க்கைச் சூழலை நம் மனதில்கொண்டு பார்க்கும்போது, இது இன்னும் அதிகமாக நம்மைக் கவர்ந்திழுக்கிறது. அவருடைய கணவர் யூஜின் சென் இறந்ததற்கும், ஹாங்காங், பின்னர் ஷாங்காயில் நடந்த போரின் போது அவருக்கு விதிக்கப்பட்ட பாதுகாப்புக் கட்டுப்பாடுகள் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகும், இந்தப் படம் நிறைவு செய்யப்பட்டது. தனது வாழ்க்கையில் போராட்டங்கள் இருந்த போதிலும், ஜார்ஜெட் இந்த ஓவியத்தில் அவருடைய திடநம்பிக்கையையும், கண்ணியத்தையும் வெளிக்காட்டுகிறார்.
உருவப்படங்கள் வரைதல் பற்றிய அவருடைய எண்ணங்களுக்கு ஒப்ப, சென் இந்தப் படைப்பைப் படைத்திருக்கிறார். மெல்லிய கோடுகளைக்கொண்டு முகபாவனைகளை வரைதல், வண்ண மாற்றங்களை வேறுபடுத்த ஒருசில முக்கிய வண்ணங்களை மட்டுமே பயன்படுத்துதல் போன்ற கடும் சிக்கன பாணியை அவர் கடைபிடித்திருக்கிறார். அவர் தன்னுடைய முகத்தோற்றத்தை சிவந்த உதடுகள், வெட்கத்தில் சிவந்த கன்னங்கள் என நுணுக்கமாகக் காட்டியிருக்கிறார். மாறாக, பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காகத் தெளிவான நேர் கோடுகளை மற்ற இடங்களில் அவர் அதிகம் பயன்படுத்தியுள்ளார். அவருடைய அழகாக வளைந்த புருவங்கள், கருப்பு சியோங்சாமின் விரைப்பான மேண்டரின் கழுத்துப்பட்டை, கவனமாகச் சுற்றப்பட்ட கொண்டை ஆகிய அனைத்தும் அடர்ந்தக் கருப்பு வண்ணத்தில் உள்ளன.
ஒவியத்தின் வலது மேற்புறத்தில் அவர் தனது குடும்பப்பெயரை “சென்” என்று கையைழுத்திட்டு மேலிருந்து கீழான சீன எழுத்து வடிவ முறையை பின்பற்றியிருக்கிறார். இந்த முறையில் தொடர்ந்து கையெழுத்து இடுவதன் மூலமும், தனது உடைகளின் மூலமும் தனது சீனப் பாரம்பரியத்தினை அறிகுறிகளாகக் காட்டுகிறார். இந்த ஓவியம் தத்ரூபமாக உண்மையைக் காட்டுவது மட்டுமின்றி, ஒரு கலைஞர் தன்னைப்பற்றிக் கொண்டிருந்த அபிப்பிராயத்தையும் தெளிவாக வெளிப்படுத்துகிறது.