Stop 1
லிம் லோவின் உருவப்படம்
ஸூ பெய்ஹோங்
Artwork
201.லிம் லோவின் உருவப்படம் (0:00)
0:00
0:00
ஸூ பெய்ஹோங் படைத்த இந்தச் சித்திரத்தில், லிம் லோ என்று அறியப்பட்ட லிம் சே கீயின் உருவப்படத்தைக் கலைஞர் படம்பிடித்துக் காட்டியுள்ளார்.
லிம், விக்டோரியா மெமோரியல் ஹால், பார்லிமென்ட் ஹவுஸ் மற்றும் குட்வுட் பார்க் ஹோட்டல் போன்ற அடையாளச் சின்னங்களாகக் கருதப்படும் கட்டடங்களைக் கட்டுவதில் ஈடுப்பட்டவர். அவர் இரண்டாம் உலகப்போரின் போது, சீன எதிர்ப்புப் போராட்ட போராளி என்று அனைவராலும் அறியப்பட்ட லிம் போ செங்கின் தந்தையுமாவார்.
இங்கே, லிம்மை மேன்மைவாய்ந்த முறையில் சித்தரித்திருக்கிறார் ஸூ. ஓவியத்தின் மொத்த நீளத்தில் பெரும்பகுதியை ஆக்ரமித்திருக்கும் லிம், கம்பீரமாகவும், பெருமிதமாகவும், சிறந்த சீன உடையில் மிளிர்கிறார். சீனாவில் கல்வியறிவாளரைக் குறிக்கும் சின்னமான கைவிசிறியுடன் தோற்றமளிக்கிறார். லிம்மை இந்த வகையில் காட்டுவது சிங்கப்பூரின் முன்னோடிகளில் ஒருவரான அவருக்குப் பெருமை சேர்ப்பதாகும்.
ஐரோப்பாவில் பயிற்சி பெற்ற ஆரம்பகால சீனக் கலைஞர்களில் இந்தக் கலைஞரும் ஒருவர். அதன் விளைவாக, சீன மை ஓவியங்களில் மேற்கத்திய உத்திகளை அறிமுகப்படுத்துவதிலும், அவற்றின் நிலையை மேம்படுத்துவதிலும் இவர் முக்கியப் பங்காற்றினார். சிங்கப்பூரில் இவர் வாழ்ந்த காலக்கட்டத்தில், முக்கியமாக இவருடைய கண்காட்சிகளின் மூலம் கலைஞர்கள் வட்டத்தில் இவருடைய தாக்கம் உணரப்பட்டது. உள்ளூர்க் கலைஞர்கள், மேற்கத்திய நவீனத்துவத்தையும், கிழக்கத்திய கலைநயத்தின் உணர்வுகளையும் எவ்வாறு ஒன்றிணைப்பது என்பதை கற்றுக்கொள்ளவும், கடைப்பிடிக்கவும் முடிந்தது.
இந்த லிம் லோவின் சித்திரம், கலைஞர்களில் ஒரு மேதையான ஸூ பெய்ஹோங்கிற்கு ஒரு புகழுரையாகவும், சிங்கப்பூர் முன்னோடிகளில் ஒருவரைக் கொண்டாடடுவதாகவும் திகழ்கிறது.