Stop 9
Wu Guanzhong காட்சிக்கூடம் பற்றிய அறிமுகம்
Archive
3209.Wu Guanzhong காட்சிக்கூடம் பற்றிய அறிமுகம்(0:00)
0:00
0:00
இந்தக் காட்சிக்கூடத்தின் தொடக்கப் பகுதி 1930 முதல் 1950 வரையிலான காலக்கட்டத்தில் சென்னின் குழந்தைப் பருவம், அவரது ஆரம்பகாலக் கலைப் பயிற்சி மற்றும் அவரது கலைச் செயல்முறை ஆகியவற்றுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது. இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள படைப்புகள் மற்றும் காப்பகப் பொருள்கள் சென் நிரந்தரமாக சிங்கப்பூருக்கு வருவதற்கு முந்தைய அவரது வாழ்க்கையின் முதல் ஐந்து பத்தாண்டுகள் காலப் பகுதியைச் சார்ந்தவை.
சீனாவின் ஜெஜியாங்கில் சென் பிறந்திருந்தாலும், 1906-ஆம் ஆண்டில் அவரது குடும்பம் அவருக்கு எட்டு வயதாக இருந்தபோது பாரிஸுக்கு இடம் பெயர்ந்தது. இந்த நடைபாதையில் உள்ள கலைப்படைப்புகள் சென்னின் ஆரம்பகாலக் கலைக் கல்வியையும், பாரிஸ் கல்விக்கூடங்களில் அவரது செம்மைக்கலைப் பயிற்சியையும் பிரதிபலிக்கின்றன.
உங்களுக்கு அருகிலுள்ள காட்சிப்பெட்டியில், சென்னின் குழந்தைப் பருவம் மற்றும் ஆரம்பகால வாழ்க்கையின் புகைப்படங்களைக் காணலாம். முதலாம் உலகப் போர் வெடித்ததைத் தொடர்ந்து, அவரது குடும்பம் நியூயார்க்கிற்குக் குடிபெயர்ந்தது. சென் 1927-ல் தானாகவே நியூயார்க்கிலிருந்து பாரிஸுக்குத் திரும்பினார். அங்கு அவர் அக்காடமி கொலரோசி மற்றும் அக்காடமி பிலோல் ஆகிய இடங்களில் படித்தார். நகரத்தில் அவர் பெற்ற படைப்புச் சுதந்திரத்தை அவர் நன்கு அனுபவித்தார், பின்னாளில் ஒரு நேர்காணலின் போது அவர், "ஒரு கலைஞர் வெளியே சென்று, சுற்றிப் பார்த்து, அவர் விரும்பியதை வரைய முடியவேண்டும்," எனப் பதிவு செய்தார்.
இந்த காட்சிக்கூடத்தினுள், அவரது நிர்வாண ஓவியங்கள், அசைவற்ற வாழ்வு ஓவியங்கள், மற்றும் வெளிப்புற இயற்கையெழில் காட்சிகளின் ஓவியங்களில் சென்னின் செம்மைக்கலைப் பயிற்சியானது பிரதிபலிக்கிறது. இந்தக் கலைப்படைப்புகள் அவர் படித்த கலவை, நிறம் மற்றும் பார்வை நுட்பங்களை உள்ளடக்கியது. இரண்டாம் உலகப் போரின்போது, சென் வரைந்த உட்புறக் காட்சிகளையும் நீங்கள் பார்ப்பீர்கள்; அதை அவர், “ஜப்பானிய ஆக்கிரமிப்பின் இருண்ட நாட்கள்,” என்று அழைத்தார்.
இந்தக் காட்சிக்கூடத்தில் நீங்கள் மேலும் செல்லும்போது, நீங்கள் காணும் மற்ற இரண்டு காட்சிப்பெட்டிகளுக்கு முன்னும் சற்று நில்லுங்கள். முதல் காட்சிப்பெட்டி அருகிலேயே உள்ளது. அது ,1936-ல் பேரிரோ காட்சிக்கூடத்தில் வைத்த சென்னின் முதல் தனிக் கண்காட்சி மற்றும் பிரஞ்சு அரசாங்கக் கலைக்காட்சிக் கூடத்தில் முதன் முதலில் அவர் வைத்த படைப்புகளைப் பற்றிக் குறிப்பிடும் செய்தித்தாள் மற்றும் பத்திரிகைத் துண்டுகளைக் கொண்டது.
வெளியேறுவதற்கு முன்புள்ள கடைசிக் காட்சிப் பெட்டி, ஒரு பயிற்சிக் கலைஞராக சென் பெற்றுவந்த மேன்மையை எடுத்துக்காட்டுகிறது. அங்கு, 1943 முதல் 1950 வரை மூன்று கண்டங்களில் நடத்தப்பட்ட அவரது தனிக் கண்காட்சிகள் தொடர்பான செய்தித்தாள் துண்டுகள் மற்றும் சிற்றேடுகளை நீங்கள் காணலாம்.