Stop 7
கொத்து நிறுத்தம்: அசைவற்ற வாழ்வு ஓவியம்
Georgette Chen
Artwork
3207.கொத்து நிறுத்தம்: அசைவற்ற வாழ்வு ஓவியம்(0:00)
0:00
0:00
இந்த அசைவற்ற வாழ்வு ஓவியங்களில் பொதுவான எதையும் நீங்கள், கவனிக்கிறீர்களா? அவற்றை ஒன்றிணைக்கும் ஏதேனும் ஒரு பொருள் இருக்கிறதா?
தொடர்ச்சியாக இடம்பெற்றிருக்கும் ஒரு பொருள் எளிய கூடை. ஆனால், அது ஒருபோதும் ஒரே கூடை அல்ல - வெப்பமண்டலப் பழங்களைக் கொண்டிருக்கும் வெவ்வேறு கூடைகளை அசைவற்ற வாழ்வு ஓவியங்களில் சென் வரைந்தார்.
பல்வேறு கூடை முடைவுகளை வழங்குவதில் சென் எடுத்தாண்டுள்ள விவரத்துணுக்குகளையும் கவனிப்பையும் உற்று நோக்குங்கள். உங்கள் இடப்புறச் சுவரிலுள்ள இனிப்பு ரம்புத்தான்களில் திறந்தவகை முடைவும், உங்கள் வலக்கோடியில் தேங்காய் மற்றும் மிளகாய்கள் உள்ள கூடையில் குறுக்கு-மறுக்கு முறை முடைவும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சென் சிங்கப்பூரில் குடியேறியபின் பல ஆண்டுகளில் இந்த அசைவற்ற வாழ்வு ஓவியங்கள் வரையப்பட்டன. சென் தனது தேர்ந்தெடுக்கப்பட்ட ஓவிய அங்கங்களின் சிறந்த குணங்களை வெளிக்கொணர்வதற்காக கலவை மற்றும் இழைநயத்துடன் தொடர்ந்து சோதனை செய்தார்.
இனிப்பு ரம்புத்தான்களில், ரம்புத்தான் ஓடுகளின் மீதுள்ள மயிர்நீட்சிகளை எடுப்பாக்குவதற்கு சென் குறுகிய, விரைவான தூரிகையடிப்புகளைப் பயன்படுத்துகிறார். இதற்கு மாறாக, பளபளக்கும் ரம்புத்தானின் வெள்ளை நிறச் சதைகளைத் திறம்பட சித்தரிக்க, தட்டையான, மென்மையான தூரிகையடிப்புகளைப் பயன்படுத்துகிறார்.
தாமரை சிம்பொனியில் சென்னின் அசைவற்ற வாழ்வு ஓவிய வேலைப்பாடு பெருவிளைவை அடைந்திருக்கிறது. உங்கள் வலப்புறச் சுவரில் இருப்பதுதான் அது. இது மட்டுமே அகன்ற கோணப் பார்வை முறையில் சென் வரைந்துள்ள ஒரேயொரு படைப்பு ஆகும். இந்த வியப்பூட்டும் ஓவியத்தின் விவரத்துணுக்குகளை உள்வாங்க சிறிது நேரம் ஒதுக்குங்கள். தாமரைப் பூக்கள் பூக்கும் வெவ்வேறு நிலைகளான - முழுமையாக மூடப்பட்ட நிலை முதல் பரந்து திறந்த நிலை வரை நீங்கள் கவனிக்கிறீர்களா? மையத்தில் ஒரு தேனீயும் உள்ளது, அது திறந்த தாமரை மலருக்குப் பொருத்தமாக அமைந்துள்ளது.
ஒரு நண்பரின் தோட்டத்தில் தான் பார்த்த தாமரைகளின் ஆர்வமிகு வடிவங்கள் மற்றும் அவற்றின் எண்ணிக்கையால் சென் மிகவும் ஈர்க்கப்பட்டார், அந்தத் "தாமரைச் சொர்க்கத்தில்" மூழ்கி பல வாரங்கள் அங்கேயே கழித்தார், அங்கு அவர் வெளிப்புறக்காட்சிச் சித்திரத்தை வரைந்தார்.
Artwork details
- Artist Name
- Georgette Chen
- Full Title
- Tropical Fruits
- Time Period
- 1969
- Medium
- Oil on canvas
- Extent Dimensions (cm)
- Dimensions 2D: Image measure: 73 x 92 cm
- Credit Line
- Gift of the artist. Collection of National Gallery Singapore.
- Geographic Association
- Singapore
- Accession Number
- P-0811