Stop 6
காட்சிப் பெட்டி 2: சென் மற்றும் கலைச் சமூகம்
Archive
3206.காட்சிப் பெட்டி 2: சென் மற்றும் கலைச் சமூகம்(0:00)
0:00
0:00
1953-ல் சிங்கப்பூருக்கு வந்ததைத் தொடர்ந்து சென் சிங்கப்பூரின் கலைச்சூழலில் ஒரு முக்கிய நபராக ஆனார். இந்த இரண்டு காட்சிப் பெட்டிகளிலும் உள்ள ஆவணங்கள் இங்குள்ள கலைச் சமூகத்திற்கு சென் அளித்த பங்களிப்புகளையும் கலைச் சமூகம் அவருக்களித்த அங்கீகாரத்தையும் விளக்குகின்றன.
சென் மூன்று பத்தாண்டுகள் நாஃபா-வில், பகுதிநேர அடிப்படையில், வரைதல் மற்றும் எண்ணெயோவியம் தீட்டுதலைக் கற்பித்தார். ஆசிரியராகப் பதிவு செய்வதற்கான அவரது அசல் விண்ணப்பப் படிவம் இடதுகோடியில் உள்ளது. அவர் நாஃபாவில் ஒரு கல்வியாளராக ஒரு முக்கியப் பாத்திரத்தை வகித்தார், அதே நேரத்தில் எதிர்காலக் கலைஞர் தலைமுறைக்கு வழிகாட்டியாகவும் இருந்தார். அவரது மாணவர்களில் சிற்பி ங் எங் டெங் மற்றும் ஓவியர் தாமஸ் இயோ ஆகியோர் அடங்குவர் அவர்களது படைப்புகளை டிபிஎஸ் சிங்கப்பூர் காட்சிக்கூடத்தில் காணலாம்.
சென் சிங்கப்பூர் கலைச் சங்கத்தில் சேர்ந்தார். அங்கு பல பத்தாண்டுகளுக்குத் தீவிர உறுப்பினராக இருந்தார். அவர் சங்கத்தின் வருடாந்திர நிகழ்ச்சிகளில் வழக்கமான பங்கேற்பாளராக இருந்தார், பின்னர் 1959-ல் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1970-களில், நுண்கலைகளில் உள்ளூர்த் திறமைகளை ஊக்குவிப்பதற்கான லீ அறக்கட்டளை நிதியத்தின் நிர்வாகிப் பதவியை சென் ஏற்றுக்கொண்டார். கண்காட்சிகளுக்கான நிதி ஒப்புதல் மற்றும் அங்கடன் பெலுகிஸ் அனேக டயா அல்லது ஏபிஏடி என்ற இலாப நோக்கற்ற கலைஞர் சங்கம் போன்ற உள்ளூர் நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பது அவரது பணியில் அடங்கும். சென்னின் நண்பரும் முன்னாள் மாணவருமான ரோஹானி இஸ்மாயில் (நீங்கள் முன்பு பார்த்த உருவப்படத்தில் இருப்பவர்) ஒரு கலைஞரும், அபட்டின் முக்கிய உறுப்பினரும் ஆவார்.
1974-ஆம் ஆண்டில், சிங்கப்பூரில் காட்சிக் கலைகளின் வளர்ச்சிக்கு அவருடைய அர்ப்பணிப்பு மற்றும் பங்களிப்புகளுக்காக ஏபிஏடி பதக்கத்தை வழங்கியது. இந்தப் பதக்கத்திற்கான அசல் சான்றிதழை “ஏபிஏடி மற்றும் கலைச் சமூகம்” பிரிவில் காணலாம்.
ஒரு கலைஞராகவும் ஆசிரியராகவும் சென்னுக்கிருந்த புகழ் காரணமாக, பல்வேறு கலைக் கண்காட்சிகளின் தீர்ப்புக் குழுக்களில் அமர்வதற்கு அவர் தொடர்ந்து அழைக்கப்பட்டார். 1971 தேசிய தின கலைக் கண்காட்சிபோன்ற பல தீர்ப்புக்குழுக்களில் அமர சென்னை அழைக்கும் பல உத்தியோகபூர்வக் கடிதங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
ஒன்றாக, இந்த ஆவணங்கள் அனைத்தும் சிங்கப்பூரின் கலை நிலப்பரப்பு உருவாகும் இந்தக் காலகட்டத்தில் அதில் பங்கேற்று அதை வடிவமைக்கும் ஒரு முக்கிய நபராக சென்னை முன்வைக்கின்றன.