Stop 14
3215

சுய உருவப்படம்

Georgette Chen
Artwork
Use headphones for a better listening experience and to be considerate to others.
3215.சுய உருவப்படம்(0:00)
0:00
0:00
ங்கப்பூரின் தேசியச் சேகரிப்பில் உள்ள சென்னின் ஆரம்பகால சுய உருவப்படம் இதுவாகும். 1934-ஆம் ஆண்டில் பிரான்சில் ஒரு தொழில்முறைக் கலைஞராக சென் முக்கியத்துவம் பெறும்போது இது வரையப்பட்டது. அவருடைய உறுதியான கண்களின் பார்வை மற்றும் புத்திசாலித்தனமான வெளிப்பாடு ஆகியவை ஒரு இளம் பெண் தனது கலைத் திறனிலும், அவளுடைய எதிர்காலத்தின் மீதிலும் உறுதியுடன் இருந்ததை உறுதிப்படுத்துகின்றன. இந்த வேலையின் கட்டுப்படுத்தப்பட்ட எளிமை ஒரு நெருக்கமான உணர்வை உருவாக்குகிறது. சற்றுச் சுறுங்கிய கண்களால் சென் உங்களை நேராகப் பார்க்கிறார். இந்தப் படைப்பில் அவர் வண்ணத்தைப் திறம்படப் பயன்படுத்தியுள்ளார், வெள்ளை கலந்த பகுதிகள், ஊதாப் பின்னணிக்கு எதிராக அவரது சுயஉருவத்தை எடுப்பாக்கி, அவரைச் சுற்றி ஒரு வெளிர் ஒளிவட்டத்தை உருவாக்குகின்றன. பச்சை வண்ணத்தின் அடர்ப் பூச்சுகள் அவருடைய தோலின் நிறத்தொனியை முக்கியப்படுத்துகின்றன. வண்ணச் சக்கரத்திற்கு எதிரெதியேயுள்ள வண்ணங்களை அருகருகே இடம்பெறச் செய்யும் இந்த நுட்பத்தை உணர்வுப்பதிவுவாதிகள் பயன்படுத்தினர். இங்கே, பச்சை நிறத்தொனிகள் அவரது தோலுக்குப் பயன்படுத்தப்படும் அடிப்படை வண்ணங்களை மேலும் தீவிரப்படுத்துகின்றன, இதன் விளைவாக பார்வையைச் சுண்டியிழுக்கும் ஒரு தீவிரம் ஏற்பட்டு, அது ஓவியத்தை உயிர்ப்பிக்கிறது. மலேயாவுக்கு இடம்பெயர்ந்தவுடன், பலனளிக்கும் வகையிலான ஒரு நம்பிக்கைக்குரிய வாழ்க்கைத்தொழில் நிலையை சென் எட்டியிருப்பதை இங்கே நாம் காண்கிறோம். அடுத்தடுத்த ஆண்டுகளில், சென் பாரிஸ், ஷாங்ஹாய் மற்றும் நியூயார்க் என, உலகம் முழுவதும் கண்காட்சிகளுக்குப் படைப்புகளுடன் சென்றார். இருப்பினும், அவரது வாழ்க்கை, இரண்டாம் உலகப் போரின் கஷ்டங்கள் மற்றும் அவரது முதல் கணவரின் மரணம் போன்ற தனிப்பட்ட துயரங்களாலும் குறிக்கப்படும். உலகெங்கிலுமான தனது பயணங்களிலிருந்து சென் தனது கலைக்கு உத்வேகம் பெற்றபோதும், சிங்கப்பூரில்தான் தனது இறுதி வேர்களைக் கண்டுகொண்டார். அங்கு அவர் தன்னைச் சுற்றியிருந்த வெப்பமண்டலச் செழுமையில் மகிழ்ந்தார். இந்த சுய உருவப்படம் சென்னை அவர் எங்கிருந்தாலும் கலையின்மீதான அன்பைப் பரப்பிய ஒருவர் எனக் காட்டுகிறது. அவர் உண்மையிலேயே உலகம் எனும் வீட்டில் இருந்த ஒரு உன்னதக் கலைஞர். நீங்கள் மேற்கொண்டு அதிகமான சென்னின் படைப்புகளைப் பார்க்க விரும்பினால், அவற்றை டிபிஎஸ் சிங்கப்பூர் கேலரி ஒன்றின் இரண்டாம் தளத்தில் அமைந்துள்ள காட்சிக்கூடத்தின் நகர மண்டபப் பிரிவில் காணலாம்.
Transcript
Share
Artwork details
Artist Name
Georgette Chen
Full Title
Self Portrait
Time Period
c. 1934
Medium
Oil on canvas
Extent Dimensions (cm)
Dimensions 2D: Image measure: 35 x 27 cm
Frame measure: 75 x 67 cm
Credit Line
Gift of Lee Foundation. Collection of National Gallery Singapore.
Geographic Association
Singapore
Accession Number
P-0818