Stop 13
3213

காட்சிப்பெட்டி 6: "கலை குறித்த சில எண்ணங்கள்" கட்டுரை

Archive
Use headphones for a better listening experience and to be considerate to others.
3213.காட்சிப்பெட்டி 6: "கலை குறித்த சில எண்ணங்கள்" கட்டுரை(0:00)
0:00
0:00
இந்தக் கட்டுரை சென்னின் கலைப் பயிற்சிக்குப் பின்னால் உள்ள தத்துவத்தைப் பற்றிய ஓர் அரிய மற்றும் வெளிச்சமான பார்வையை நமக்குத் தருகிறது. இது மாண்டரின் மொழியில் எழுதப்பட்டது. 1943 ஆம் ஆண்டில், சென் ஷாங்காய் மெட்ரோபோல் விடுதியில் ஒரு பெரிய கண்காட்சியை நடத்தியிருந்தார், அதே ஆண்டு, ஷாங்ஹாய் செய்தித்தாள்களில் இக்கட்டுரை வெளியிடப்பட்டது. தலைப்பை “கலை குறித்த சில எண்ணங்கள்” என்று மொழிபெயர்க்கலாம். இயற்கையெழில் காட்சிகள், தாவரங்கள் மற்றும் மக்களை ஓவியம் வரைவதில் உள்ள தனது விருப்பத்தை சென் இதில் வெளிப்படுத்துகிறார். மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சித்தரிப்பதில் தான் குறிப்பாக ஈர்க்கப்பட்டதாக அவர் எழுதினார், அவர், "மக்களின் வாழ்க்கை உயிரோட்டமானது, புதியது மற்றும் உற்சாகமானது," என்று குறிப்பிட்டார். மிக முக்கியமாக, சென் தனது கற்பனையிலிருந்து ஓவியம் தீட்டக்கூடாது என்பதில் பிடிவாதமாக இருந்தார். இங்கே, "கற்பனையை அடிப்படையாகக் கொண்ட பிரதிபலிப்பு ஒருபோதும் உண்மையான விஷயத்தை உண்மையாகப் பிரதிபலிக்க முடியாது," என்று அறிவித்தார். இவ்வாறு, அவருடைய எல்லாப் படைப்புகளும் தன்னைச் சுற்றியுள்ள சூழலிலுள்ள பொருள்கள், நபர்கள் அல்லது காட்சிகளை அடிப்படையாகக் கொண்டவை. "நான் என்ன பார்க்கிறேனோ அதையே வரைகிறேன், அது ஒரு நிலப்பரப்பாக இருந்தாலும் சரி, அல்லது ஒரு உருவமாக இருந்தாலும் சரி," என்று அவர் எழுதினார். இந்தக் கண்காட்சியில் நீங்கள் பார்க்கும் உருவப்படங்கள், இயற்கையெழில் காட்சி ஓவியங்கள் மற்றும் அசைவற்ற வாழ்வு ஓவியங்கள் என அனைத்தும் இந்தத் தத்துவத்தைப் பின்பற்றுகின்றன. ஓவியத்தின் செம்மை விதிகளில் சென் உறுதியாக நம்பிக்கை கொண்டிருந்தார், அதை அவர் தனது நடைமுறையில் கண்டிப்புடன் பின்பற்றினார். அவர் தனது ஓவியங்களில் வெளிர்-அடர் நிற மாறுபாட்டுக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை விளக்குகிறார். வெளிர்-அடர் நிற மாறுபாட்டுக் கோட்பாடு என்பது ஒளி மற்றும் நிழலின் சமநிலையையும், இரண்டுக்கும் இடையிலான வேறுபாட்டையும் குறிக்கிறது. "ஒளி மற்றும் நிழலில் கவனம் செலுத்தாத ஓவியம் வெற்றானது மற்றும் உயிரற்றது," என்று சென் எழுதினார். உதாரணமாக, அசைவற்ற வாழ்வு ஓவியங்களில், பொருள்களுக்கு இடையில் உள்ள நிழல்களின் நிலை மற்றும் ஒளி மூலத்தின் இருப்பிடம் ஆகியவை கித்தானின் தட்டையான தன்மைக்குள் ஒரு உணர்வுப் பரிமாணத்தை உருவாக்க முடியும். இந்தக் காட்சிக்கூடத்தில் உள்ள தி டிராகன் பிளேட் மற்றும் ஸ்டில் லைஃப் வித் சுகர் கேன் போன்ற படைப்புகளில் இதைக் காணலாம். இந்தக் கண்காட்சியில் நீங்கள் கண்ட ஓவியங்களில், ஓவிய அங்கங்களை வரையும்போது சென் இந்தத் தத்துவத்தை எவ்வாறு கடைபிடித்தார் என்பதைப்பற்றி மீண்டும் சிந்தியுங்கள். உங்கள் சுற்றுலாவை மேலும் தொடரும்போது, இதுபோன்ற பல விஷயங்களைப் பாருங்கள். மாறுகிற சூழலுக்கும், பல ஆண்டுகளாக அடிக்கடி பயணிப்பதற்கும் ஏற்ப வண்ணங்கள் மற்றும் கலவையைப் பயன்படுத்தினாலும், சென்னின் படைப்புகள் ஏன் மிகவும் ஒரே சீரானவையாக உள்ளன என்பதை இவ்வாறான பல்வேறு கொள்கைகள் விளக்குகின்றன.
Transcript
Share