Stop 12
3212

ஹக்காக் குடும்பம்

Georgette Chen
Artwork
Use headphones for a better listening experience and to be considerate to others.
3212.ஹக்காக் குடும்பம்(0:00)
0:00
0:00
ஒரு தாய் மற்றும் அவரது மூன்று குழந்தைகளின் இந்த உட்புறக் காட்சி ஓவியமானது சென்னின் மிகப்பெரிய மற்றும் மிக முக்கியமான படைப்புகளில் ஒன்றாகும். இந்த ஓவியத்தை வரைந்த காலத்தில், சென் ஏற்கனவே தாய் மற்றும் குழந்தை என்ற விஷயத்தை உள்ளடக்கிய பல படைப்புகளை ஏற்கனவே வரைந்திருந்தார். இங்கே, அவர் ஒரு பெரிய குடும்பக் குழுவில் உள்ள பிணைப்புகளை ஆராய்ந்து, குடும்பத்தின் மென்மையான உணர்வையும், ஒருவருக்கொருவருடனான நெருங்கிய உறவையும் காட்சிப்படுத்துகிறார். அடையாளம் தெரியாத ஹக்காக் குடும்பத்தின் மாதிரிகள் ஒரு முக்கோண வடிவத்தில் அமர வைக்கப்பட்டுள்ளனர். குடும்பத்தின் தலைவரான தாய் அதன் உச்சியிலும், அவரது இரண்டு மூத்த குழந்தைகளும் அடியிலும் உட்கார வைக்கப்பட்டுள்ளனர். அவரது பக்கத்திலுள்ள தொப்பி மற்றும் மூங்கில் நுகத்தடிகள் முறையே பாதுகாப்பு மற்றும் உழைப்பின் அடையாளங்களாக அமைகின்றன. தாய் தனது இளைய குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுக்கிறார். அதன் பிரதிபலிப்பாக, மூத்த உடன்பிறப்பு இளைய உடன்பிறப்புக்கு ஒரு கிண்ணத்திலிருந்து அரிசியெடுத்து ஊட்டுகிறார். இந்த வளர்ப்பு நடவடிக்கைகள் உறவுகள் அளிக்கும் கவனிப்பு எவ்வாறு தலைமுறைகளிடையே நீட்டிக்கப்படுகிறது என்பதைக் குறிக்கின்றன. சென் அரிதாகவே பல மாதிரிகளைக் கொண்ட ஓவியங்களை வரைந்தார். குடும்பத்தின் கருப்பொருளை ஆராயும் மற்றொரு அறியப்பட்ட உருவப்படம் ‘குடும்ப உருவப்படம்’ ஆகும். அதனை முந்தைய காட்சிக்கூடத்தில் நீங்கள் முன்பு கண்டீர்கள். அன்றாட நிகழ்வுகளை வரைவதில் சென்னுக்கிருந்த உத்வேகத்தை ஹக்காக் குடும்பம் பிரதிபலிக்கிறது. இந்தப் படைப்பு சென்னுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும், மேலும், அது வரையப்பட்டபின் நிகழ்ந்த அவரது அனைத்துத் தனிக் கண்காட்சிகளிலும் ஒரு முக்கிய அம்சமாக அது தோன்றியது.
Transcript
Share
Artwork details
Artwork Title
Hakka Family
Artist
Georgette Chen